2. காதலையும் கடந்த உறவு

193 9 6
                                    

அவன் வரும்வரை அங்கே அமர்ந்திருக்க பிடிக்காமல் அங்கே சுவற்றில் மாற்றப்பட்டு இருந்த படங்களை பார்க்கத் துவங்கினாள் வதனா. அப்போது  லிஃப்டில் இருந்து கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து ஒரு ஆறடி ஆடவன் கம்பீரத்துடன் நடந்து வந்தான். அவனைச் சுற்றி நான்கைந்து பேர் அவனுடன் பேசிக்கொண்டு வந்தனர். புருவங்கள் சுருக்கி கூர்மையான பார்வையில் அவர்கள் கூறுவதைக் கேட்டவனைப் பார்த்து வதனா பிரமித்தாள்.

சுருளான கேசம், மாநிறம், ரசிக்கத் தூண்டும் கூரிய விழிகள். ஒரு நிறுவனத்தை தன் தோளில் தாங்கும் வலிமை அவன் தோற்றத்தில் வெளிப்பட்டது. அவனைக் கண்டு விழி அகலாது ரசித்தவள் பின் சூழல் உணர்ந்து தன்னைத் தானே கொட்டிக் கொண்டாள். அவன் தான் இந்த கம்பெனியின் எம். டி என்பதை அருகில் இருந்தவரிடம் கேட்டு உறுதி படுத்திக் கொண்டாள். மனதில் ஒரு நொடி, 'எப்படி இவனை அனுகுவது' என்று தயங்கியவள் பின் ராகவ் கூறியதை வைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நெருங்கினாள்.

அவன் முன் லேசாக கையாட்டி புன்னகையுடன், "ஹாய்" என்றாள்.

அந்த நிசப்தமான சூழலில் தன் முன் ஒலித்த புதிய குரலை கேட்டு ஆச்சரியத்துடன் அவள் புறம் திரும்பினான் அந்த ஆடவன். அவளைக் கண்டவன் திகைத்தான். தான் தற்போது வகிக்கும் இடத்தையும் அவனது ஆளுமையையும் கண்ட பலரும் அவனுடன் மரியாதை கலந்த வரையரையோடு பேசுவதற்கே பழக்கப்பட்டவன் வெள்ளை நிற வடிவங்கள் பொருந்திய ஊதா நிற குர்தி மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்த ஒரு சராசரி பெண் இயல்பாக பேசுவதைப் கேட்டு கண்கள் மெல்ல விரித்தான்.

அவனது சிந்தனைகளை தடுக்கும் வகையில் அவன் முன் கை அசைத்தவள் அவனை நடப்புக்கு அழைத்து வந்தாள்.

"ஹலோ, என்ன பாஸ் இப்படி ஸ்டன் ஆகிட்டிங்க. சாரி. நான் உங்க ஃப்ரண்டோட ஃபரண்ட். இன்னும் சொல்லப்போனா உங்க ரிலேஷன் ஓட ஃபரண்ட். உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானே. அதுசரி, உங்களுக்கு இருக்க ஷெடியுல்ல நியாபகம் வச்சிருக்கறது கஷ்டம் தான்", என்று அவளே கேட்டு அவளே அதற்கு பதிலும் கூறினாள்.

காதலையும் கடந்த உறவுМесто, где живут истории. Откройте их для себя