அந்த நிலவொளியில் திரவியத்தை காணும் போது வதனாவிற்கு மனம் முழுக்க பரவசமாக இருந்தது. அவன் பேசிக்கொண்டே போக அதைக் கேட்பதற்கு பதில் அவனது முக பாவங்களை அணுஅணுவாக ரசித்தவள் முன் சொடுக்கினான் திரவியம்.
"என்ன வது அதுக்குள்ள கனவுல டூயட்டா?" என்று கேட்டான்.
அதற்கு அவள் பதில் பேசாமல் அவன் விரலோடு விரல் கோர்த்து, "இந்த மொமன்ட் இப்படியே இருந்துட்டா நல்ல இருக்கும்ல? எதைப்பத்தியும் கவலப்படாம...மனசு லேசா...நீங்க இப்டி என் பக்கத்துல ஒரு..சப்போர்ட்டா. திடீருனு இதெல்லாம் கனவா கலஞ்சிடுமோனு தோணுது" என்றாள்.
அவள் கன்னத்தில் கை வைத்தவன், "சேன்ஸே இல்ல. நம்ம லைஃப்ல இனி எதுவும் கலையாது. நிறையா புது புது மொமனட்ஸ் தான் உருவாகும். சரி, ஃபுட் வந்திருச்சு. சாப்பிடலாமா?" என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் நினைவு வந்தவளாக பரமேஸ்வரிக்கு அழைத்து தான் வெளியே உண்ண வந்திருப்பதாக கூறினாள். அவர் கேள்விகளை அடுக்க பிறகு கூறுவதாக கூறி அழைப்பை துண்டித்தாள். அதன் பின்னர் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவளைக் கண்ட திரவியம் சிரிக்க அவள் அவனை முறைத்தாள்.
"உங்களுக்கென்ன? நீங்க எந்த நேரம் போனாலும் யாரும் கேட்கப் போறதில்ல. நான் மட்டும் எதுவும் சொல்லாம லேட்டா போனேனா என் பாட்டி என்ன அப்படியே ஊறுகாய் போட்டுடுவாங்க" என்று சலித்து கொண்டாள்.
அதற்கு அவன் பதில் பேசாமல் தன் கைப்பேசியை காட்டினான். அதில் அவன் அன்னை அழைப்பு வந்திருக்க அந்த எண்ணிற்கு அவன் வதனாவை அழைத்து வந்தததை குறுஞ்செய்தியாக அனுப்பினான். அதைக் கண்டவள் புன்னகைக்க அதேநேரம் அவன் அன்னையின் எண்ணில் இருந்து வாட்சப்பில் ஒரு வாய்ஸ் நோட் வந்தது. அதைக் கண்டவன் அவளிடம் இருந்து தன் கைப்பேசியை பிடுங்க முயற்சிக்க அவள் எழுந்து ஓடி அதை தன் பின்னால் மறைத்து விட்டாள்.
அதை அவள் க்ளிக் செய்ய அவன் அன்னையின் குரல் சத்தமாக ஒலித்தது.
ВЫ ЧИТАЕТЕ
காதலையும் கடந்த உறவு
Любовные романыநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...