அவர் அவனையே உற்று நோக்க ஏன் இவ்வாறு பார்க்கிறார் என்று புரியாமல் அவரே பேசட்டும் என்று பார்வையை தன் கைபேசியில் திருப்பினான் ராகவ். மௌனத்தை முதலில் களைத்த பரமேஸ்வரி நேரடியாக பேச வேண்டிய விடயத்திற்கு வந்தார்.
"வதனா நடந்துக்கிறத கவனிக்கிறியா இல்லையா நீ?" என்று கேட்டார்.
அவர் கேள்வியில் நிமிர்ந்தவன் தானே தெளிவாக அறியாத ஒன்றைப் பற்றி எவ்வாறு விளக்குவது என புரியாமல் மௌனம் சாதித்தான். அது அவரை மேலும் எரிச்சலூட்ட, "நான் கேட்டது காதுல விழலையா? இல்ல என்னடா போய் சொல்லலாம்னு யோசிக்றியா?" என்று கேட்டார்.
அதற்கு மறுப்பாக தலையசைத்தவன், "அப்டி எல்லாம் இல்ல. அதப்பத்தி எனக்கே ஒன்னும் தெரியாதப்போ நான் என்ன சொல்றதுனு தான் அமைதியா இருந்தேன்" என்றான் வெளிப்படையாக.
அவனது பதில் அவருக்கு மேலும் அச்சத்தை உண்டு பண்ணியது. இருவரும் ஒருவருக்கொருவர் எதையும் மறைத்து வைத்து அவர் இதுவரை கண்டதில்லை. அப்படி இருந்தும் மறைத்துள்ள காரணம் என்ன என சிந்தித்தவர் அவனிடம், "ஃபர்ண்ட் ஃபர்ண்ட்னு சொன்னா மட்டும் பத்தாது. பசங்க பொண்ணுங்க சிநேகிதித்த பத்தி வேணா எனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா, சிநேகிதம்னா என்னனு எனக்கு தெரியும். ஒருவேள சிநேகிதி பாதை மாறி போனா அவள சரியா வழிநடுத்துறது தான் நல்ல சிநேகிதம். நீ எப்படி?" என்று கேட்டார்.
அவரது கேள்வி அவனை கோபப்படுத்தியது. படாரென்று எழுந்தவன் அவரிடம், "அவளப் பத்தி எனக்கு தெரியும். அவ வழி மாறி போற ஆள் இல்ல" என்று அப்போதும் அவளுக்கு வக்காலத்து வாங்கினான்.
அதற்கு அவர், "இந்த ரோஷத்துக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல. உன்னவிட வதனாவ பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவ அப்படி நடக்ற பொண்ணு இல்ல தான். ஆனால் யானைக்கும் அடிசறுக்கும். கேள்விப்பட்டதில்ல? அந்த மாதிரி அவ ஒருவேளை எதாச்சும் தப்பு பண்றதா இருந்தா அத சரி பண்றது என் கடமை. அதான் உன்னக் கூப்பிட்டு கேட்கிறேன்" என்றார்.
ESTÁS LEYENDO
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...