7. காதலையும் கடந்த உறவு

136 8 4
                                    

சிறிது நேரத்தில் டெல்லி சென்றுவிட அங்கே அவர்களை அழைத்துச் செல்ல ஒரு கார் தயாராக இருந்தது. அதன் மூலம் அவர்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்று தத்தமது அறைக்குள் புகுந்தனர். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின் சந்திப்பிற்கான அனைத்தையும் மீண்டும் சரிபார்த்தாள் வதனா. அதன் பின்னர் தான் தன் கைபேசியை உயிர்ப்பிக்காமல் போனது நினைவில் வர அதை உடனே உயிரப்பித்தாள். அதில் ராகவின் தவறவிட்ட அழைப்புகள் பத்து என்று காட்டியது.

அவனது எண்ணிற்கு அழைக்க இரண்டாவது அழைப்பில் அவன் எடுத்தான். எடுத்ததும், "நான் தூங்குற கேப்ல டெல்லி ட்ரிப்பா?" என்று கேட்டான்.

அதைக் கேட்டவள், "ஆமா. அதான் ஆன்டி கிட்ட சொன்னேன்ல. கும்பகர்ணன் மாறி தூங்கிட்டு எப்போ எந்திரிக்குறான் பாரு," என்று திட்டியவள், "சரி நீ எதுக்கு கூப்பிட்டேனு தெரியுது. உன் ஐபாட் சோஃபா அடில வச்சுட்டு போய்ட்ட. அத டிவிக்கு கீழ உள்ள ட்ரால வச்சிருக்கேன். அப்றம் என் வாட்ச்ச மறந்து டேபிலயே வச்சிட்டேன். தண்ணீ எதுவும் பட்ற போது. எடுத்து ஷெல்ஃப்ல வச்சிடு" என்றாள்.

அதைக் கேட்டதும், "இது. இது தான் ஒரு நல்ல ஃபரண்டுக்கு அழகு. ஐபாட் இல்லாம நான் நானாவே இல்ல. ஹே, டெல்லில பெர்ஃப்யூம் சூப்பரா இருக்கும். எனக்கு மறக்காம வாங்கிட்டு வா" என்றான்.

"அது சரி. நான் என்ன டெல்லிக்கு மீட்டிங்கு வந்ததேனா? இல்ல ட்ரிப்கு வந்தேனா? ஷாப்பிங் பண்ண சொல்ற. டைம் இருந்தா பாக்லாம். நான் கிளம்பனும். பை" என்று அவன் அழைப்பை துண்டித்தாள்.

அவள் அழைப்பை துண்டித்ததும் கிளம்பி அவள் வீட்டுக்கு சென்றவன் அங்கிருந்த தன் ஐபாட் ஐ எடுத்துக் கொண்டு அவள் கூறியது போலவே அவளது வாட்ச்சை ஷெல்ஃபில் வைத்தான். அவளது பாட்டி அவனை எப்போதும் போல திட்டிவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போனார். அதில் தனக்கு பிடித்த இசையைக் கேட்டவாறே வெளியே வந்தவன் அப்போதுதான் வீட்டின் எதிர்ப்புறமாக சற்று தள்ளி நின்றிருந்த ரக்ஷிதாவை கண்டான்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now