ரக்ஷிதாவின் தந்தை அந்த சடலம் முன்பு நின்று கண்ணீரோடு, "என் செல்லமே..உன்ன இப்படி பார்க்காவா நான் இன்னும் உயிரோட இருக்கேன்...நானும் உன் அம்மாவும் உன்ன எவ்ளோ ஆசையா வளர்த்தோம்..நீ ஐஞ்சு வயசா இருக்கப்போ ஸ்விம்மிங் பூல் பக்கத்துல விளையாடிட்டு இருந்தப்போ நீ விழுந்திடுவேனு உன் பக்கத்துல வந்து தவறி விழுந்து உன் அம்மா நீச்சல் தெரியாம என்ன விட்டு போனதுக்கு..உன்ன காரணம்னு நினச்சு ஒதுக்கி வச்சிட்டேனு...இந்த அப்பாவ பிடிக்கலேனு போய்ட்டியா? அப்பாவுக்கு உன்மேல எப்பவும் பாசம் அதிகம்டா.. உன்கிட்ட கேட்கலேனாலும் சரியா பேசலனாலுமா உன் நினைப்பும் உன் அண்ணன் நினப்பும் தான் என்ன உயிரோட வச்சிருக்கு..மனசுல அவ்ளோ பாசம் இருந்தும் நீ ஆச ஆசயா பேச வர்றப்போ எல்லாம்..பிஸ்னஸ் அது இதுனு உன்ன ஒதுக்கிட்டேனே..நீ நல்லா இருக்கனும்னு தானே உன்ன யூ. எஸ் அனுப்ப முடிவு செஞ்சேன்...நீ சண்டை போட்டு கேட்டிருந்தா அப்பா வேணானா சொல்லிடுவேன்..ஐயோ..இப்படி உன்ன பாக்க வச்சிட்டியே.." என்று அழுதவர் சிலையென நின்ற தன் மகனிடம் சென்று, "டே உன் தங்கச்சியை பாருடா..சின்ன வயசுல அவள கீழ கூட நடக்க விடாம தூக்கிட்டு சுத்தினியே அந்த தங்கத்த பாருடா..அழுது தீர்த்துடு. உன்னையும் தனியா விட்டு தண்டிச்ச இந்த அப்பாவ அடிச்சாவது உன் குறைய தீரத்துக்கோடா.. உன்னையும் என்னால இழக்க முடியாதுடா" என்று கூறி அவர் அவனை குலுக்க உடைந்து அவனும் அழுதான்.
அதற்கு மேலும் முடியாமல் வதனா அவரிடம் சென்று, "அங்கிள் இது உங்க பொண்ணு இல்ல. ப்ளிஸ் அழாதீங்க. இதெல்லாம் நாங்க உங்க மனச தெரிஞ்சுக்க போட்ட ட்ராமா" என்று கூற அதிர்ந்த அவர் போர்த்தி இருந்த போர்வையை விலக்கினார். அதைக் கண்டதும் ஒரு பக்கம் நிம்மதியாக இருக்க அதையும் தாண்டி கோபம் அவருக்கு தலைக்கேறியது. கோபத்தில் அவர் கை ஓங்க அவள் முன் வந்து தடுத்த திரவியத்தின் முகத்திலும் கோபத்தின் தடம்.
அவனை விலக்கிய வதனா, "ரொம்ப ரொம்ப சாரி அங்கிள். ரக்ஷிதா உங்க அன்பு கிடைக்காம ரொம்பவே கஷ்டப்பட்டுடா. அவளுக்கு நீங்க இரண்டு பேரும் வேணும். சின்ன வயசுல நடந்த அந்த கசப்பான நினைவுகள விட்டுட்டு புதுசா லைஃப தொடங்குங்க. ரக்ஷிதா ராகவ லவ் பண்ணா தான். ஆனா, அவ உங்கள மீறி போகல. அவுங்களுக்கு கல்யாணம் நடக்கல. உங்க சம்மதம் இல்லாம அது நடக்கவும் நடக்காது. ப்ளிஸ் அங்கிள். உங்க மக உயிரோட பாதுகாப்ப ராகவோட வீட்ல இருக்கா. அவனோட அம்மா தன் பொண்ணு மாதிரி அவள பார்த்துக்கிறாங்க" என்று கூறி அவள் உண்ணும் போது எடுத்த காணொளியை காட்டினாள். அதில் அவள் ராகவின் அன்னையை ஏக்கத்துடன் பார்ப்பதும் அவர் மகிழ்ச்சியுடன் அவளுடன் இணைந்து உண்பதுமான காட்சிகள் இருந்தன. அதைப் பார்த்தவளுக்கு மனம் சற்று இலகுவானது.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...