அவனிடம் பேச வேண்டும் என்ற வந்தவளுக்கு அவன் நிலையைக் கண்டு வருத்தமாக இருந்தது. தான் எடுத்த முடிவிற்கு காரணமே இல்லாமல் அவனையும் வதைக்கிறோமே என்ற உறுத்தலும் இருந்தது. இருப்பினும் இது தான் இருவருக்கும் சரி என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். அவள் எதுவும் பேசாமல் தன்னையே உற்று நோக்குவதை உணர்ந்தவன் தொண்டையை செறுமி அவள் இருக்கும் இடத்தை நினைவு படுத்தினான். அவளும் பேசத் துவங்கினாள்.
"திரவியம்.." என்று அவள் துவங்கியதும் அவன் கண்கள் ஆவலுடன் அவளை நோக்கியது. நடந்த அனைத்திற்கும் அவள் ஏதேனும் விளக்கமாவது தருவாள் என்றே அவன் நினைத்து எதிர்பார்த்து கொண்டு இருந்தான். மீண்டும் அவர்கள் இணைய வாய்ப்பு கிட்டும் என்று அவன் மனம் ஆவலுடன் அவளை பார்த்தன. ஆனால் அவளோ, "நம்ம ரெண்டு பேரோட தனிப்பட்ட ப்ராப்ளத்ல வேற யாரையும் இன்வால்வ் பண்ணாதீங்க. நான் என் மனசுல உள்ளத தான்.. சொன்னேன். ஃபோர்ஸ் பண்ணி..யாராலயும் யார் மேலயும் லவ்...வர வைக்க முடியாது. உங்க பேரயும் கஷ்டப்பட்டு உருவாக்குன இந்த கம்பெனியையும் இந்த சின்ன..இன்ஃபாக்சுவேஷன்கு கெடுத்துக்காதீங்க" என்றாள்.
அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் இதயத்தில் ஊசியாக இறங்கியது. அவனால் இதை எல்லாம் பேசுவது வதனா தான் என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"இன்ஃபாக்சுவேஷனா? அப்படி தான் நீ நினைச்சிட்டு இருந்தியா? என்னனென்னவோ பேசுற வது. என்ன இதுக்கு மேல யாரும் இன்சல்ட் பண்ணிட முடியாது. ஃபோர்ஸ் பண்றேன் அது இதுனு ரொம்ப என்ன சீப் பா பேசிட்ட. இப்போ தான் எனக்கு புரியுது நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுனு," என்று மனதின் வலியோடு கூறியவன் அதற்கு பதிலாக அவள் எதுவும் கூறும் முன்னர் கை உயர்த்தி தடுத்தான்.
சில நிமிடங்களுக்கு பின்னர் அவளை வெற்றுப் பார்வை பார்த்து, "நீங்க என்னோட எம்ப்ளாயி. நான் உங்க எம்.டி. நான் எப்படி என் கம்பெனிய நடத்தனும்னு நீங்க எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டியதில்ல. மிஸ் வதனா யூ மே லீவ். என் நேம எப்படி மெய்ன்டேன் பண்ணனும்னு எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க" என்று கூறினான்.
VOCÊ ESTÁ LENDO
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...