தன் தொழிலில் மும்மரமாக மாறிய ராகவால் அதன் பின்னர் வதனாவின் வீட்டிற்கு அதிகம் வர முடியாமல் போனது. எப்போதும் அவனுடன் வார இறுதியைக் கழித்ததால் வதனாவிற்கு அவன் இல்லாதது ஒரு வித சுணக்கத்தை தந்தது. எப்போது அவன் வேலைகள் முடிந்து மீண்டும் எப்போது அவனுடன் இணைந்து கழிக்கும் பொழுதுகள் கிடைக்கும் என்று ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தாள். இதன் நடுவே வதனா கிளம்பிய பின்னர் வதனாவின் வீட்டிற்கு ராகவ் வந்தான். அவனை வரச்செய்தது பரமேஸ்வரியே. அவரைப் பற்றி முழுதாக அறியாமல் அவன் தனது எண்ணை அன்று பேசியபின் அவரிடம் தர அவனை தொடர்ந்து அழைத்து ஒருவழியாக்கிவிட்டார் அவர்.
தனது கம்பெனிக்கான இடத்திற்கு வாடகை மற்றும் அட்வான்ஸ் கொடுத்து விட்டு அதற்கான பிற வேலைகளிலும் ஈடுபட்டவன் அதை வேறு ஒருவரிடம் ஒருமணிநேரம் கொடுத்து விட்டு தற்போது வதனாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அவனைக் கண்டதும் எப்போதும் போல் அல்லாமல் அவனை வரவேற்று காஃபி போட்டு வந்தவர் அவனிடம் தந்தார்.
அதற்கு அவன், "இது நல்லா இருக்கே. மத்த நேரம்லாம் கேட்டாக் கூட கண்டுக்காம இருக்க வேண்டியது. இப்போ வேல ஆகனும்னதும் இப்படி ஒரு கவனிப்பா? ஆனாலும் டூ மச் ஓல்ட் லேடி" என்று அதைப் பெற்றுக் கொண்டு பருகினான்.
அவன் எதிரே அமர்ந்தவர் முறைத்தவாறே, "எத்தன வாட்டி சொல்லிற்கேன் அப்படி என்னக் கூப்டாதனு. எல்லாம் என் நேரம். உங்கிட்ட இப்டி கெஞ்சிகிட்டு இருக்கேன். அதவிடு, எல்லாம் விசாரிச்சியா?" என்று கேட்டார்.
"அதெல்லாம் பக்காவா விசாரிச்சாச்சு. பையன் ஃபேமிலி செம. நம்பலாம். ப்ரைவேட் டிடெக்டிவ்லாம் வச்சிருக்கேன். பணக்காரங்கனாலும் பணத்தை பெரிசா நினைக்குற டைப் இல்ல. ஒரே பையன். இதான் பையன் ஃபோட்டோ. இதுல அவங்க ஃபேமிலி போட்டோ அப்றம் அவங்க பண்ற பிஸினஸ் பத்திலாம் தகவல் இருக்கு" என்று கொடுத்தான்.
அவன் கூறியதைக் கேட்டவருக்கு திருப்திகரமாக இருந்தது. அவனிடம் இருந்து திரவியத்தின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர் தன் பேத்தியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென அதையும் அவனது குடும்பம் சம்மந்தமான விவரம் அடங்கிய பையையும் சாமிப்படத்தின் முன் வைத்து கும்பிட்டார். அந்த மகிழ்ச்சியில் அவனை அமர சொல்லிவிட்டு அவனுக்கு பாயாசம் செய்து கொண்டு வரவதாக அடுக்களை நோக்கி விரைந்தார்.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...