26. காதலையும் கடந்த உறவு

83 5 0
                                    

கடற்கரையில் அமர்ந்து அதன் அழகை ரசிப்பதே ஒரு தனி சுகம். அந்த ஆழ்கடல் தனக்குள் தேக்கி வைத்த அழுத்தங்களை எல்லாம் அலைகளாக வெளியேற்றி தன்னை அமைதியாக்கி கொண்டே இருந்தது. அதன் கரையோரம் பொழுதைக் கழிக்க வந்த பலரும் தமக்கு ஏற்ற வழியில் அந்த இனிமையை ரசித்தனர். குழந்தைகள் சில மணல் வீடு கட்டியும் முதியவர்கள் நடைபயணம் மேற்கொண்டும் இளைய வயதினர் அதன் அலைகளில் நீச்சல் பழகியும் தங்கள் பொழுதை கழித்தனர். தன் முன் நீண்ட அந்த ஆழ்கடலில் பார்வையை பதித்தவாறே ரக்ஷிதா, "ராகவ் இதப் பார்க்கிறப்போ உனக்கென்ன தோணுது?" என்று திடீரென கேட்டாள்.

அதைக் கேட்ட ராகவ் தன் கையில் வைத்து கொறித்து கொண்டு இருந்த கடலை பொட்டலத்தில் கவனத்தை வைத்துக் கொண்டு, "கடல இன்னும் கொஞ்சம் வெந்திருக்கலாம். அடுத்த தடவ அந்த கடைல வாங்க வேணாம். தள்ளி ஒரு அக்கா தள்ளுவண்டி வச்சிருந்தாங்கள்ல அங்க வாங்கலாம். மசாலா சுண்டல் கூட அங்க இருந்தது" என்று அது ஏதோ பெரிய விடயம் போல பேசினான்.

அதைக் கேட்டவள் கலகலவென்று சிரித்து விட்டாள். அவளது சிரிப்பை ரசித்தாலும் காரணம் புரியாததால் மெல்லிய கோபத்துடன், "என்ன ரக்ஷு? எதுக்கு சிரிக்கிற? நீதான கேட்ட" என்றான்.

அதற்கு ரக்ஷிதா தலையை ஒரு பக்கம் அழகாக சாய்த்து அவன் கண்களுக்குள் ஊடுருவி, "இப்டி என்ன எப்பவும் சந்தோஷமா வச்சிருப்பியா?" என்று கேட்டாள்.

அந்த கேள்வியை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் வதனா மனம் விட்டு பேச வேண்டும் என்று கூறியது நினைவில் வர அவளை ஆழமாக பார்த்தான். இருப்பினும் அவனால் அவள் மனதை படிக்க முடியவில்லை. எனவே, அவளாக கூறும்வரை தானாக எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் என்று மெல்லிய புன்னகையுடன், "ஓஹோ! பேஷா பண்ணிடுறேன். நேத்து தான் தங்கத்துரை ஜோக் புக் ஒன்னு கடைல பார்த்தேன். அது ஒன்னொன்னா மனப்பாடம் செஞ்சு உன்கிட்ட தினமும் சொல்லி சிரிக்க வச்சிடுறேன்.." என்று பேசிக்கொண்டே போனவனின் கைகளைப் பிடித்தாள் ரக்ஷிதா.

காதலையும் கடந்த உறவுDonde viven las historias. Descúbrelo ahora