10. காதலையும் கடந்த உறவு

114 8 2
                                    

அடுத்த நாள் பணிக்கு சென்றவள் எப்போதும் போல தன் வேலைகளில் மூழ்கினாள். அதைத் தொடர்ந்து அவர்கள் குழுவிற்கு மற்றொரு ப்ராஜெக்ட் கிடைத்தால் மீண்டும் வேலையே கண்ணாக மாறிப்போனாள். அதே சமயம் திரவியத்திற்கும் வேலைப்பளு அதிகமானது. முக்கிய சந்திப்புகளின் காரணமாக வெளிநாடு பயணம் என்று செல்வதும் வருவதுமாகவே இருந்தான். இப்படியே பல வாரங்கள் தன் போக்கில் சென்றன. ராகவ் மீண்டும் வதனாவிடம் இயல்பாக பேசினாலும் அவன் மனதின் ஓரம் தன்னிடம் அவள் ஏன் சொல்லவில்லை என்ற நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அதேசமயம் ரக்ஷிதா வதனாவின் வீட்டைத் தாண்டி செல்லும் போதெல்லாம் ராகவை பார்வையால் தேடிப்பார்த்தாள். ஆனால், அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் தன் புதிய தொழிலுக்கான முயற்சியில் முழுவீச்சில் இறங்கினான் ராகவ்.

கடனுக்காக பேங்கில் அவன் நண்பன் மூலம் முயற்சி செய்ய அதிலும் ஒரு சிக்கல் வந்தது. அத்தனை பெரிய தொகைக்கு ஏதேனும் ஒன்றை அடமானம் வைக்க வேண்டி இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறியவன் வதனாவிடம் புலம்பினான். அவள் வறுபுறுத்தலின் பெயரில் அதுகுறித்து தன் தந்தையிடம் தெரிவித்தான். அவனது முயற்சியைக் கண்டு அவனது எதிர்காலம் குறித்து பயம் நீங்க பெருமையாக உணர்ந்தார் அந்த தந்தை. என்னதான் தன் தொழிலை அவன் பார்க்கப்போவது இல்லை என்ற வருத்தம் மனதின் ஓரம் இருந்தாலும் அவனுக்கு இந்த தொழிலைத் தொடங்கவதில் உள்ள ஆர்வத்தை அறிந்து மனம் குளிர்ந்தார்.

அவரே பணம் தருகிறேன் என்று கூறினாலும் அதை மறுத்தவன் கடனாக மற்றும் பெற உதவி செய்யமாறு கேட்டுக் கொண்டான். அதனால் தான் அவனுக்காக வாங்கியிருந்த நிலத்தை செக்யூரிட்டியாக தர முன்வந்தார். இன்னும் சில வாரங்களில் அனைத்தும் நல்ல விதத்தில் முடிந்து விடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை திறம்பட மேற்கொண்டான். இப்படியிருக்க ஒருவழியாக திரவியம் மீண்டும் பயணங்கள் முடிந்து அலுவலகம் வந்தான். அனைவரும் வரும் முன்னரே வந்தவன் இங்கு அலுவலகத்தில் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை சரிபார்த்தான். என்னதான் அலுவலகம் வந்ததும் சேய்ய வேண்டும் என்று பல விடயங்களை மனதில் குறித்து வைத்திருந்தாலும் அவன் முதலில் செய்தது சிசிடிவி வழியே வதனாவைக் கண்டு ரசிப்பதே.

காதலையும் கடந்த உறவுTahanan ng mga kuwento. Tumuklas ngayon