ராகவ் கூறியதைக் கேட்ட வதனா, "ஏன்டா இதுக்கா இப்படி எமெர்ஜின்சி மாதிரி ஓடி வந்திருக்க?" என்று கேட்டாள்.
அதற்கு அவன், "ஹே, அவ இது மாதிரி என் கிட்ட பேசுனதே இல்ல. அதான் எனக்கு ஒரு மாதிரி பயம் ஆகிடுச்சு. எவ்ளோ யோசிச்சும் எனக்கு ஒன்னும் புரியல" என்றான்.
வதனா அவன் கூறியதைப் பற்றி யோசிச்ச, "எனக்கு ஒன்னு தோணுது. அதே மாதிரி இருந்தா நல்லா தான் இருக்கும். நீ பதட்டப்படாம போ. அவ உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசப்படுறானு நினைக்கிறேன்" என்றாள்.
அதற்கு அவன் அவளை முறைத்து விட்டு, "அதுக்கு எதுக்கு ஹஸ்கி டோன்ல சொல்லனும். எனக்கென்னவோ பயமா தான் இருக்கு. ஒருவேளை வேற மாதிரி இருக்குமா?" என்று அவளிடம் அவன் எச்சிலை விழுங்கி கேட்க அவள் அவன் கையில் கிள்ளினாள்.
அவன் வலியில் முனக, "சே அப்டிலாம் இல்ல. நீ ரொம்ப கெட்டு போய்ட்ட. அவ உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னு ஆசப்படுற. பொண்ணுங்க ஒருத்தவுங்கள ட்ரஸ்ட் பண்ண ரொம்ப யோசிப்பாங்க. ஆனா பண்ணிட்டாங்கனா எல்லாத்தையும் அவங்க கிட்ட ஷேர் பண்ணனும்னு நினைப்பாங்க. அவளுக்கும் அதே மாதிரி எதாச்சும் இருக்கும். நீ வேற ஏதாச்சும் கற்பனை பண்ணி செஞ்சு அப்றம் ஸ்லிப்பர்ஸ் ஆல அடி வாங்காத" என்று அறிவுரை கூறினாள்.
அதைக் கேட்டவன் ஒரு தெளிவுடன், "இதுக்கு தான் இந்த குரங்கு வேணுங்கறது. நானா எதாச்சும் பண்ணி சொதப்பிருப்பேன். சரி நா அப்ப கிளம்பறேன் " என்று கிளம்ப தயாரானான்.
அவனிடம், "அவ என்ன சொல்ல வரானு தெரியாம நீயா முந்திரி கொட்டையா எதாச்சும் பண்ணிடாத. கவனமா பேசி உன் காதல சொல்லு. எனக்கு தான் எதுவும் இல்லைனு ஆகிடுச்சு. உனக்காச்சும் எல்லாம் செட் ஆகனும்" என்று கூறும்போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
அதைக் கேட்டு பதறியவன் ஏதும் கூறும் முன்னர் வதனாவே பேசினாள். "எனக்கும்... திரவியத்துக்கும் நடுவுல இனி ஒன்னும் இல்ல. ஏன் எதுக்குனு கேட்காத. என்னால உன்ட சொல்லாம இருக்க முடியல. அதான் சொல்லிட்டேன். எல்லாருக்கும் ஆசப்படுற லைஃப் அமையறது இல்ல" என்று கசப்பான புன்னகையுடன் வதனா தன் அறைக்குள் சென்றாள்.
ESTÁS LEYENDO
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...