சரியாக இரவு பன்னிரண்டு மணி அளவில் ரக்ஷிதா ஆவலுடன் ராகவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அழைக்க அது நீங்கள் தொடர்பு கொண்டுள்ள எண் வேறு யாரிடமோ பேசிக்கொண்டு உள்ளார் என்று கூறியது. அதைக் கேட்டவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனுக்கு முதலா வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் இருந்த ரக்ஷிதா அவன் பேசி முடிக்கும் வரை மன சோர்வுடன் காத்துக் கொண்டு இருந்தாள்.
இங்கே இப்படி இருக்க ராவின் எண்ணுக்கு எப்போதும் போல முதல் ஆளாக அழைத்த வதனா அவனை தூக்க கலக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சித்து கொண்டு இருந்தாள். அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து தன் கம்பெனிக்கு சென்று நாளை விடுமுறை அறிவித்தவன் வந்ததும் உறங்கி விட்டான். சிறிது நேரத்தில் அழைப்பு ஓசை கேட்க அதை எரிச்சலுடன் பார்த்தவன் அதில் எதிர்பார்த்த விதமாக வதனா என்று காட்ட அழைப்பை ஏற்று கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.
உடனே வதனா, "ஹாப்பி பர்த்டே கொரங்கு. என்றும் இதே போல இருப்பாயாக. என்ன சத்தத்தை காணோம். ஹலோ..ஹலோ" என்று அவள் கத்த,
எரிச்சலுடன், "ஏன்டி கத்துற. லைன்ல தான் இருக்கேன்...சரியான தூக்கம். ஒழுங்கா போன வச்சிட்டு" என்றான்.
அதற்கு அவள், "எந்த பிறந்த நாளுக்காச்சும் நைட் முழிச்சு விஷ் பண்றேனேனு மதிச்சு தாங்க் யூ னு சொல்லிருக்கியா? கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டே இரு" என்று திட்டினாள்.
"ம்..பேசி முடிச்சிட்டியா? நான் தூங்கட்டா?" என்று அவன் கூற,
தன் தலையில் அடித்து கொண்டவள், "ஹே, லூசு. சரி தூங்கு. எனக்கும் தூக்கம் வருது" என்று அழைப்பை துண்டித்தாள்.
அதேநேரம் மீண்டும் அழைப்பு வர ஒற்றை கண்ணைத் திறந்து எரிச்சலுடன் பார்த்தவன் அது ரக்ஷிதாவிடம் என்றதும் தூக்கம் கலைந்து எழுந்தான். அதை அவன் ஏற்றதும், "ஒருவழியா பிக் பண்ணிட்ட. எனிவே ஹாப்பி பர்த்டே மை டியர்" என்றாள்.
அதை கேட்டதும் புன்னகையுடன், "தாங்க் யூ ரக்ஷூ. டியர்னு செமயா இம்ப்ரூவ் ஆகிருக்க. பர்த்டே ஸ்பெஷல் ட்ரீட் என்ன எனக்கு?" என்றான்.
ESTÁS LEYENDO
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...