அந்த சிறுவர் பூங்காவிற்குள் உள்ள பெரிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டு இருந்த வதனாவின் மனம் வெகு நாட்களுக்கு பின் அமைதியாக இருந்தது. அவள் அருகே வந்த ஒரு பத்து வயது சிறுமி அவள் எப்போது இறங்குவாள் தான் ஏறிக் கொள்ளலாம் என்ற ஆவலோடு நின்று கொண்டிருந்தாள். அதைக் கண்ட வதனா தன் கால்களால் ஊஞ்சலை நிப்பாட்டி விட்டு அந்த சிறுமியை கைகாட்டி தன் அருகே வருமாறு கூறினாள்.
"உனக்கு ஊஞ்சல் ஆடனுமா?" என்று வதனா கேட்டதும் அந்த சிறுமி தன் அன்னையை திரும்பி பார்த்தாள்.
அவள் அன்னையும் சைகையால் அவளை ஏறுமாறு கூற வதனாவின் புறம் திரும்பியவள் மகிழ்ச்சியோடு, "ஆமாம் ஆன்டி" என்றாள்.
உடனே இறங்கிக் கொண்ட வதனா அந்த சிறுமி அமருவதற்கு உதவினாள். அதே நேரம் பாப்கார்ன் வாங்கி வந்த ராகவ் வதனாவிடம், "ஹே.. நான் ஏறவே இல்லை. என்னடி சொல்லி என்ன பாப்கார்ன் வாங்க சொன்ன? பாப்பா நீ இறங்கு அங்கிள் இன்னும் விளையாடல" என்று அந்த சிறுமியிடம் மல்லுக்கு நின்றான்.
அதைக் கேட்ட அந்த சிறுமியும் கோபத்துடன், "அங்கிள் இது நாங்க விளையாட்றது. போய் பெரியவங்க விளையாட்ற ராட்டினம் போங்க" என்றாள்.
அதற்கு அவன் மீண்டும் ஏதும் கூறும் முன்னர் அவனை இழுத்துச் சென்ற வதனா, "ஏன்டா அந்த சின்ன பொண்ணு கிட்ட நோஸ் கட் வாங்குற?" என்று கேட்டாள்.
அவளை முறைத்தவன், "கேப்படி கேப்ப. இவ்ளோ நேரம் ஜாலியா ஊஞ்சல் ஆடிட்டு இப்ப எனக்கு அட்வைஸ் பண்றியா? எவ்ளோ வருஷமாச்சு இப்டி இந்த குட்டிஸ் மாதிரி எதைப்பத்தியும் யோசிக்காம விளையாடி. அத கொஞ்சம் நேரம் என்ன என்ஜாய் பண்ண விடமாட்டியே" என்றான்.
அதைக் கேட்டு அசட்டு சிரிப்புடன், "விடு விடு. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லனும். அதுக்கு தான் இங்க தான் வர சொன்னேன்" என்றாள்.
அதைக் கேட்டவன் நேற்றைய நிகழ்வுகளை நினைத்து புன்னகையுடன், "நானும் சொல்லனும். பட் லேடிஸ் ஃபர்ஸ்ட். நீயே சொல்லு" என்றான்.
KAMU SEDANG MEMBACA
காதலையும் கடந்த உறவு
Romansaநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...