32. காதலையும் கடந்த உறவு

244 8 4
                                    

ஓர் அறைக்கு அழைத்துச் சென்ற திரவியம் அவளை அங்கிருந்த சோஃபாவில் அமருமாறு கூறினான். பின் அவள் ஏதும் பேசும் முன்னர் தண்ணீர் பாட்டில் கொடுத்து குடிக்க சொன்னான். அதை எடுத்து தண்ணீரை குடித்தவள் பின் அவனிடம், "திரு..நீங்க நினைக்கிற மாதிரி.." என்று துவங்க அவள் இதழில் விரல் வைத்து அமைதி படுத்திறான் திரவியம்.

"இங்க நடந்த எதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு எனக்கு புரியுது. ஏதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க் போயிட்டு இருக்கு. ஐ கேன் கிட் இட்" என்றான்.

அவனை விழி அகலாமல் பார்த்தவள், "நிஜமாவே என்ன நம்புறீங்களா?" என்று கேட்டாள்.

ரக்ஷிதா பேசிய வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்துள்ளது என்பதை அறிந்த திரவியம் அவள் அருகே அமர்ந்து, "இங்க பாரு வது. ராகவும் நீயும் எவ்ளோ நல்ல ஃப்ரண்ட்ஸ்னு எனக்கு தெரியும். தவர ஐ ட்ரஸ்ட் யூ எ லாட். எந்த சூழ்நிலையிலும் அது மாறாது. உன்ன அவ ஹெர்ட் பண்றப்பவே என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. ஆனா, நான் அங்க பேசி இருந்தா அது சரியா இருக்காதுன்னு தோணுச்சு. ஸ்டில் இன்னும் ஒரு வார்த்த பேசிர்ந்தா நானே லெஃப்ட் ரைட் வாங்கிருப்பேன். ஆனால், அதுக்குள்ள ராகவ் முந்திகிட்டான்‌" என்றான்.

அவனை பார்த்தபோது அவளது உள்ளத்தின் வேர்வரை உருகியது. தன்னை காதலால் பூரிக்கச் செய்து தன்னை முழுமையாக நம்பும் தன்னவன் மீது அவளுக்கு அளவற்ற அன்பு தோன்றியது. அவனது நெஞ்சில் சாய்ந்தவள், "தேங்க்ஸ் திரு. திகட்ட திகட்ட உங்கள காதலிக்கனும்னு மனசு துடிக்குது. ஆனா, எப்படி அத காட்டனு தெரியல" என்றாள்.

அவளை ரசனையோடு அரவணைத்து மௌனமாக அந்த நிமிடங்களை கடத்தினான் திரவியம். அப்போது யோசனை வந்தவளாய் வதனா, "எனக்கு முக்கியமான ஒரு வேல இருக்கு திரு. ரக்ஷிதா ராகவா மேல உள்ள லவ்ல அப்டி பேசிட்டா. ஆனால் எனக்கு நல்லா தெரியும். அவ அப்படி பட்ட பொண்ணு இல்ல. சின்ன வயசுல இருந்து அம்மா அப்பா பாசமா கிடைக்காம என்ன மாதிரியே ரொம்ப கஷ்டப்பட்டுடா. அதான் ஒரு எமோஷன்ல வாரத்தைய விட்டுட்டா. நான் ராகவ் கிட்ட பேசி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்" என்று எழுந்தாள்.

காதலையும் கடந்த உறவுTahanan ng mga kuwento. Tumuklas ngayon