9. காதலையும் கடந்த உறவு

127 8 2
                                    

வீட்டிற்கு வந்ததும் தான் கூறியதை நினைத்து முகம் மலர்ந்தவள் பரமேஸ்வரியைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்டாள். அவளை மீண்டும் கண்டதும் அவர் கவலைகள் நீங்க அவளது உடமைகளை எடுத்து வைக்க உதவினார். அவர் உணவு பரிமாறியதும் அதை உண்டவள் அங்கு திரவியத்துடன் உணவு உண்ட பொழுதுகளை நினைத்து தானாக இதழ்கள் புன்னகையில் விரித்தாள். அவளது செய்கையில் மாற்றத்தை உணர்ந்தவர் அனைத்தும் நன்மையில் முடிய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.

அவளுக்கு அடுத்த நாள் விடுமுறை என்பதால் ராகவிற்கு வாங்கிய பெர்ஃப்யூமை அவனிடம் கொடுக்க அவன் வீட்டிற்கு கிளம்பினாள். அவளிடம் ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் இருசக்கர வாகனம் இல்லாததால் ஆட்டோ அல்லது பேருந்தில் செல்வதே வாடிக்கையாக வைத்திருந்தாள். பயணக் களைப்பு ஒருபுறம் இருந்தாலும் அவள் மனம் துடிப்புடன் இருந்தது. எனவே, பரமேஸ்வரி ஓய்வெடுக்குமாறு கூறியும் மறுத்து கிளம்பி விட்டாள்.

அவன் வீட்டிற்கு சென்றதும் அவனது அன்னை அவளை வரவேற்று ஏன் அடிக்கடி வருவதில்லை என கடிந்து கொண்டார். அவரை சமாதானம் செய்து ராகவ் எங்கே என்று கேட்டாள். அவன் தன் தந்தையுடன் அலுவலகம் சென்றதாக அவர் கூறவும் அவள் புருவங்கள் முடிச்சிட்டது. ராகவின் தந்தைக்கு தன் தொழிலை அடுத்து ராகவ் முன்னிருத்தி செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், ராகவிற்கு அதில் கடுகளவும் விருப்பம் இல்லை. அவனுக்கு வேறொரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. இதை அவன் அவரிடம் பலமுறை கூறி முதலீட்டுக்கான பணம் கேட்டபோதும் அந்த முடிவிற்கு எதிராகவே அவர் இருந்தார்.

ராகவ் பொறுப்பை ஏற்கா விட்டால் தனக்கு அடுத்த இந்த தொழிலை யார் எடுத்துச் செல்வார் என்ற அச்சம் அவருள் இருந்தது. அதனால் எப்படியேனும் அவனுக்கு இதில் ஆர்வம் உண்டு பண்ணிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் பலமுறை இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்துள்ளன. இன்று எப்படியாவது அவனை தன்னுடைய தொழிற்சாலைக்கு அழைத்துச்சென்று தனது தொழில் பற்றிய ஒரு புரிதலை அவனுள் கொண்டு வர வேண்டும் என்று அவனைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்.

காதலையும் கடந்த உறவுحيث تعيش القصص. اكتشف الآن