அந்த நேர்முகத் தேர்வில் தேர்வான வெங்கடேஷின் பெயர் சொல்லி அழைத்த பெண் அவனை திரவியத்தின் அறைக்கு அழைத்து சென்றாள். இந்த திட்டம் (ப்ராஜெக்ட்) முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முன்னரே அதற்கான பயிற்சியை பரிசோதனை செய்திருந்தான் திரவியம். ஆனால், வதனாவுடனான உரையாடலின் பின்பு தேர்வானவர்களுடன் நேரில் உரையாடும் சந்திப்பை உருவாக்கியவன் முதலில் வெங்கடேஷ் வந்ததும் சற்று ஏமாற்றமடைந்தான்.
இருப்பினும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவனது வேலை குறித்து சில கேள்விகளை கொடுத்து அவன் திறனை எடை போட்டான். அவனது பதில்கள் திருப்தி அளித்ததால் அவர்கள் வேலைசெய்யப் போகும் திட்டம் குறித்து முக்கிய தகவல்களை சுருக்கமாக கூறினான். அதில் இருந்த சந்தேகங்களை அவன் கேட்கவும் அதற்கு தகுந்த விளக்கமும் அளித்தான்.
அதற்கு பின்னதாக வெங்கடேஷை அவனுடன் பணிபுரிய இருக்கும் திட்டக்குழுவில் உள்ளவர்களுக்கு அந்த பெண் அறிமுகப் படுத்தினாள். அதற்கு பின் வதனாவை ஒரு பெண் அழைத்துச் சென்றாள். திரவியத்தின் அறையைத் தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைய வேறு வழியின்றி தானும் உள்ளே நுழைந்தாள் வதனா. அவளை பார்த்ததும் கண்களை கூர்மையாக்கியவன் அவளை அமருமாறு சைகை செய்தான். அவளுடன் வந்தவள் விடைபெற்று செல்ல அவளிடம் பதினைந்து நிமிடங்களுக்கு பின்னர் அவளை அழைத்து செல்லுமாறு திரவியம் கூறினான்.
நிகழ்ந்த அந்த குழப்பத்தை தீர்க்க எண்ணியவள் பேசத் துவங்கும் போது அவளிடம் கேள்விகளை அடுக்கினான் முன்னவன். அவனது கேள்விகளை எதிர்பாராதவள் அவை ஒவ்வொன்றிற்கும் சிந்தித்து தெளிவான பதிலை கூறினாள். அதைக் கேட்டு அவன் மனம் ஏனோ பெருமை அடைந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குட். பட் இவ்ளோ நல்ல ஸ்கில்ஸ் இருக்க நீங்க ஏன் எங்கயும் எக்ஸ்டன்டா வொர்க் பண்ல?" என்று கேட்டான்.
அதற்கு அவள் குடும்பத்தின் சூழல் தான் காரணம். ஒவ்வொரு நல்ல ஊதியத்திற்கும் அவள் தன் வேலையை மாற்றிக் கொண்டாள். கடனை சீக்கிரம் அடைப்பதற்கு அது உதவியது. அதை கூறாமல், "எனக்கு ஆப்ட் ஆன ஒரு கம்பெனில வொர்க் பண்ணனும்னா தான் ஷிஃப்ட் ஆனேன். என்னோட வொர்க்க அதுதான் இன்னும் டெவலப் பண்ணச்சு. செல்ஃப் டெவலப்மென்ட் இருந்தா தானே கம்பெனியயும் நல்ல ஸ்டேஜ்கு எடுத்துட்டு போக முடியும்" என்றாள்.
ESTÁS LEYENDO
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...