அங்கிருந்த இறுக்கத்தை போக்க எண்ணிய வதனா அவரிடம் திரவியத்திற்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டாள். உடனே, அவரின் முகம் பிரகாசமானது. அவனுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் அவர் ஆர்வமுடன் கூற அதையெல்லாம் தன் கைபேசியில் குறித்துக் கொண்டவள் அதில் என்னென்ன தனக்கு உபயோகப்படும் என்று மனதில் கணக்கிட துவங்கினாள். பின், அந்த வீட்டை முழுவதும் சுற்றிக் காட்டினார்.
அப்போது அவளிடம், "நானும் சுரேந்தரும் மொத மொதோ ஒரு காலேஜ் கல்சுரல்ஸ்ல தான் மீட் பண்ணோம். எனக்கு டேன்ஸ்னா ரொம்ப பிடிக்கும். அங்க நான் ஒரு பர்ஃபாமென்ஸ் பண்ணேன். அதுல இம்ப்ரஸ் ஆகி என்ன பாராட்டலாம்னு அவன் வந்தப்போ தான் எங்க நட்பு ஆரம்பிச்சிச்சு. அப்போ எங்க ரெண்டு பேர் ஃபேமிலியும் ரொம்ப கஷ்டப்பட்டுற நிலமல இருந்துச்சு. எனக்கு டேன்ஸ் ஸ்டூடியோ வைக்கனும்னு ஆச. அத எங்க வீட்டுல சொன்னப்போ பயங்கரமா திட்டு வாங்கினேன். அவங்க பார்க்குற ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு போக சொன்னாங்க. அப்போ லாம் மனசொடஞ்சு சுரேந்தர் கிட்ட பயங்கரமா அழுதுருக்கேன். அப்போ எனக்கு ஆரதலோ இருந்தது அவனோட வார்த்தைகள் தான். நம்ம நிலம ஒருநாள் கண்டிப்பா மாறும் நீ வேணா பாருன்னு சொல்லிட்டே இருப்பான். இப்ப நினச்சோ கூட நேத்து நடந்த மாதிரி இருக்கு. சுரேந்தர்கு சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும்னு ஆசை. ஆனா, அதுக்கான இன்வெஸ்ட்மென்ட்ட அரேன்ஜ் பண்ண முடியல. ரெண்டு பேருமே எங்க கனவ தொலைச்சுட்டோம். ஆனா, வாழ்க்கையை தொலைக்கக் கூடாதுனு போராடினோம். அப்போ சுரேந்தர் கவர்மென்ட் எக்ஸாம்னு படிச்சிட்டு இருந்தான். நான் ஒரு கம்பெனில வேலைக்கு போனேன். சுரேந்தர்கும் இன்கம் டேக்ஸ்ல வேலை கிடைச்சது. வீட்டுல கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணோம். அப்றம் திரவியம் பொறந்தான். எங்க லைஃபே மாறிடுச்சு. அவ்ளோ சந்தோஷமா இருந்தோம். அவனுக்கு ரெண்டு வயசா இருந்தப்போ என் வேலையை விட்டுட்டு சுரேந்தர் கொடுத்த மோட்டிவேஷன்ல சின்னதா ஒரு ஸ்டூடியோ ஓபன் பண்ணேன். பிடிச்சத செய்றப்போ நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாரு. அதுக்கு ஈடே இல்லை. திரவியத்துக்கு கூட நான் ஆடுறதுனா ரொம்ப பிடிக்கும். சுரேந்தர்கு தான் ஆனா நேர்மையா இருக்குறதால ட்ரேன்வர் ஆகிட்டே இருப்பான். அவன விட்டு இருக்க முடியாம நானும் அவன் இருக்க ஊருக்கும் இங்கே ஸ்டூடியோ பார்த்துக்கவும் அலைஞ்சுட்டே இருப்பேன். ட்ராவல் எனக்கு சேரவே இல்ல. சுரேந்தர் எவ்ளோ தடவ சொல்லியும் நான் கேட்கல. அப்றம் எப்படின்னு தெரில ஒரு ஆறு வருஷம் முன்னாடி எனக்கு ஆஸ்த்மா வந்துருச்சு. உடம்புக்கு ரொம்ப முடியாம போச்சு. ஸ்டூடியோவ என்னோட ஸ்டூடன்ட் கைல விட்டுட்டு இப்படி வீடே கதினு ஆகிட்டுன். அப்பாவுக்கும் பையனுக்கும் என்ன இப்படி பார்க்கவே முடியல. சுரேந்தர்கு அவனால எனக்கு இப்படி ஆச்சுன்னு ஒரே குற்றவுணர்ச்சி. அதனால நான் அவன பார்க்க வர வேண்டாம். அவனே என்ன பார்க்க வரேனுட்டான். என் செல்ல மகன் என்னப் பார்த்துக்க என் கூடவே ஒரு நர்ஸ் இருக்க வச்சுட்டான். சும்மா நர்ஸ்ங்கறேன். அவ தான் உருட்டி மிரட்டி என்ன நல்லா பாரத்துக்கிறா. என்னவோ அவனால என்ன இப்படி பார்க்க முடியல. அதனால வேலை அது இதுன்னு சொல்லிட்டு அவாய்ட் பண்றான். நான் எழுந்திக்கிறதுக்கு முன்னாடி ஆஃபிஸ் போவான். தூங்கின பிறகு வருவான். இன்னும் இரண்டு மூணு மாசத்துல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறதால இங்கையே செட்டிலாகுற மாறி வரேனு சுரேந்தர் சொல்லிருக்கான். நாங்க பழைய மாதிரி சந்தோஷமா இருக்கனும். அதான் இப்போதைக்கு என் ஆசை" என்று குரல் கரகரக்க பேசினார்.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...