8. காதலையும் கடந்த உறவு

133 7 2
                                    

அடுத்த நாளின் சந்திப்பு அன்றைய நாளின் காலையில் நடக்க இருந்தது. அதற்கு இருவரும் தயாராகி வந்து காருக்குள் ஏறினர். நேற்றைய நிகழ்வை எண்ணி ஒருவித குறுகுறுப்புடன் திரவியம் அவளைப் பாரக்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து சிரிப்பை அடக்கி மடிக்கணினியைத் திறந்து சந்திப்பிற்கு தேவையான அனைத்தையும் வதனா சரிபார்த்தாள். அவனிடம் இருந்து தன் முகத்தை மறைக்கும் விதமாகவே அவள் அமர்ந்திருந்தாள். எப்படி இத்தனை இலகுவாக அவனிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்தது என்பது இப்போதும் அவளுக்கு விந்தையாக இருந்தது. இருப்பினும் இந்த ஒருமுறையாவது எதைப்பற்றியும் சிந்திக்காமல் இந்த நிமிடங்களை அனுபவிக்க எண்ணினாள்.

அதைக் கண்டவன் அவளிடம், "ஓ.. இதுதான் லேப்டாப் மாஸ்கா? இத எப்படி க்ராஸ் பண்றதுனு புரியலையே" என்று மெல்ல எட்டி எட்டி பார்த்தான்.

அதற்கு மேல் முடியாமல் மடிக்கணினியை நகர்த்தி ஓரம் வைத்தவள், "என்ன வேணும் உங்களுக்கு?" என்று கேட்டாள்.

அதற்கு அவன், "இப்போதைக்கு இப்படி பார்த்துட்டே நீ பேச பேச கேட்டுட்டே இருக்கனும். அப்றம் இன்னும் அதிக நேரம் உன்னோட ஸ்பென்ட் பண்ணனும். என்னதான் பேசுனாலும் ஏதோ ஒரு விஷயம் உன்ன பாதர் பண்ணிட்டே இருக்கே. அது என்னன்னு நீயே என்கிட்ட சொல்ற அளவு நம்ம இன்னும் க்ளோஸ் ஆகனும். உன் லைஃப்ல ஒரு பார்டா நான் ஆகனும்" என்றான்.

அவன் பேசிய வார்த்தைகள் மூலம் அவன் அவளை எவ்வளவு தூரம் உன்னிப்பாக கவனித்துள்ளான் என்பதை புரிந்து கொண்ட போது அவளது விழிகள் ஈரமாகத் துவங்கியது. ஆனால் தன்னை அவன் முன் பலவீனமாக காட்டிக் கொள்ள விரும்பாதவள் முயன்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

அமைதியாக மீண்டும் மடிக்கணினியை எடுத்தவள் சிந்தனையே இல்லாமல் வெறுமனே திரையை வெறித்து பார்த்தாள். அவளது மௌனம் அவனக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணினாலும் அவளுள் ஏதோ ஒரு போராட்டம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now