18. காதலையும் கடந்த உறவு

118 6 2
                                    

அவள் இன்னும் ஏதேனும் கேள்விகள் கேட்பானோ என்று அஞ்சியவள் முன்னே விரைந்து நடக்க அவளைப் பின்தொடர்ந்த திரவியம், "ஹே.. ஏன் இவ்வளவு ஸ்பீடா போற?" என்று கேட்டான்.

அதற்கு அவள், "டைம் பாருங்க. ஆல்ரெடி நைன் தேர்டி ஆகிடுச்சு" என்றாள்.

அதற்கு அவனும், "சரி, கேப் புக் பண்ணிட்டியா? இல்லாட்டி நானே உன்ன ட்ராப் பண்ணிடுறேன். எனக்கு வொர்க் ஆல்மோஸ்ட் ஓவர்" என்றான்.

"அதில்ல. ராகவ்கு கால் பண்ணேன். இங்க பக்கத்துல தான் இருக்கேனு சொன்னான். அதான் அவன வர சொல்லிற்கேன். இன்னேரம் வந்திருப்பான்" என்று கூறிக்கொண்டே நடந்தாள்.

அதைக் கேட்டவன், "ஓரே ஆஃபிஸ்ல இருக்கோம். அட்லீஸ்ட் நம்ம ஃபர்ண்ட்ஸ்னாச்சும் நினச்சேன். அடுத்த லெவல் பத்தி யோசிக்கிறேனு சொன்ன. ஆனா, உன்ன ட்ராப் பண்ற அளவு கூட என்ன இன்னும் நீ ட்ரஸ்ட் பண்ணலையா?" என்று உண்மையான ஆதங்கத்துடன் கேட்டான்.

அதற்கு மறுப்பாக தலையசைத்தவள், "ட்ரஸ்ட் அது இதுலாம் ஒன்னு இல்ல. நீங்க இந்த கம்பெனியோட எம்.டி. உங்களுக்கு நிறைய வொர்க் இருக்கும். அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கால் பண்ணல. மத்தபடி நீங்க நினைக்கிற எந்த ரீசனும் இல்ல" என்றாள்.

அதற்கு அவனும் சலிக்காமல், "ஓ..நீ அப்டி வர்ற. அப்போ காலைல நான் பண்ண மெசேஜ்கு ஏன் ரிப்ளை பண்ணல. என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசிக்காத. நான் கெஸ் பண்ணிடுவேன்" என்றான்.

அவள் ஏதும் பதில் சொல்லும் முன் அவள் எண்ணிற்கு அழைப்பு வர அதைப் பாரத்தவள் அவசரமாக அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஓடினாள்.

அங்கே ராகவ் காரில் அவளுக்காக காத்திருந்தான்‌. அவள் வந்ததும் அவளை முன் இருக்கையில் அவன் அமர சொல்ல அவன் காரில் வந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவள் அவனிடம், "என்னடா கார்லாம் எடுத்துட்டு வந்திருக்க? உன் பைக்க தொலைச்சிட்டுயா?" என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தாள்.

அவளை முறைத்த ராகவ், "வாய் வைக்காத மென்டல். திங்க்ஸ் வாங்கிட்டு இருந்தேனு சொன்னேன்ல. அதுக்கு தான் அப்பா கார எடுத்துட்டு வந்தேன். பைக் நல்லபடியா இருக்கு" என்றான்.

காதலையும் கடந்த உறவுWhere stories live. Discover now