வதனா அடம்பிடித்ததால் அந்த அடர் பச்சை நிற புடவையை உடுத்தி வந்து அவள் கூறியவாறே வெட்கச் சிரிப்புடன் நடந்து வந்தார் பரமேஸ்வரி. அவர் வேண்டாம் என மறுத்தும் அவரை தன் கைப்பேசியில் புகைப்படங்கள் எடுத்தவள் அதை அவரிடம் காண்பித்தாள். பின், இருவரும் இணைந்து வெளியே பூங்கா சென்று விட்டு ஒரு உணவகத்தில் இரவு உணவை உண்டனர். அப்போது ராகவ் அழைக்க அனைத்தையும் கூறியவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அன்றிரவு உறங்கினாள். பல வருடங்கள் கழித்து எந்தவித கவலைகளும் இல்லாத நிம்மதியாக உறக்கம் அவளுக்கு கிடைத்தது.
அடுத்த நாள் காலை அலுவலகத்தில் அவள் தன் வேலையில் மூழ்கிப் போயிருந்த சமயம் அவளருகே அமர்ந்திருந்த பாத்திமா அவளை அழைத்தாள். என்னவென்று அவள் திரும்ப அப்போது அவரவர்க்கான இலக்குகளை அடங்கிய ஃபைலில் அவளுடையதை நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்டவள் முழுவதும் பார்த்து விட்டு யோசனையுடன் அவளை பார்த்தாள்.
"ஹே! இதுதான் நம்ம டார்கெட்னு முன்னாடியே ராஜேஷ்சார் சொல்லிட்டார்ல. இது வெறும் அஃபிஷியில் ரிமைன்டர் தான்" என்று மூடி வைத்துவிட்டு தன் மடிக்கணினியில் வேலையைத் தொடர்ந்தாள். அவளை மீண்டும் அழைத்த பாத்திமா, "அது எங்களுக்கும் தெரியுது. அஃபிஷியல் ஃபைல்ல அவங்கவங்க தான் பார்க்கனும்னு ரூல்ஸ் இருக்கு. அத யாரோ சிலர் யூஸ் பண்ணிக்கிறாங்க போலயே?" என்று பீடிகையோடு கூறிவிட்டு சிரித்தாள்.
ஆனால் அதைக் கேட்ட வதனாவிற்கு காலும் புரியவில்லை தலையும் புரியவில்லை. தலையில் கைவைத்து, "எப்பவும் எதையும் நேராவே சொல்ல மாட்டியா நீ? இந்த வேலையெல்லாம் விட நீ பேசுறத புரிஞ்சிக்க தான் பயங்கரமா சிரமப்படனும் போலயே. இப்ப என்ன தான் டி சொல்ல வர்றே நீ? திரும்ப எதாச்சும் புரியாம ஆரம்பிச்ச கொதிக்ற காஃபிய தலைல ஊத்திடுவேன்" என்று வேலைக்கு நடுவே எரிச்சலூட்டியதற்காக பாத்திமாவை கையில் காஃபியோடு வதனா மிரட்டினாள்.
உடனே தலைக்கு மேல் கை உயர்த்தியவள், "சரி சரி..சொல்றேன். அஃபிஷியல் ஃபைல்ல உனக்கு ஸ்பெஷலா அன்அஃபீஷயிலா ஒன்னு வந்திருக்கு" என்று அவள் மேலும் திட்டும் முன் அதன் ஓரத்தில் இருந்த இடைவேளியில் இருந்த திரவியத்தின் எண் அடங்கிய அவனுடைய தனிப்பட்ட அட்டையை எடுத்துக் கொடுத்தாள். அவள் கூறியது புரிய கண்ணம் லேசாக சிவந்தவள் அதை அவளிடம் பெற்றுக் கொண்டு தன் கைப்பையில் திணித்தாள்.
ВЫ ЧИТАЕТЕ
காதலையும் கடந்த உறவு
Любовные романыநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...