நினைவில் தொலைந்தவள்: 5

85 6 2
                                    

நினைவில் தொலைந்தவள்: 5

ஷிவானி " அம்மா அம்மா அம்மா! " என தீவிரமாய் ஒரு யோசனையிலே ஏதோ செய்து கொண்டிருந்த தன் தாயை சுற்றி மழலையவள் குதியாய் குதிக்க, சிரிப்போடு அவளை தூக்கிய ஷிவன்யா

" என்னாச்சு என் தங்கத்துக்கு? என்ன பாத்தீங்க வெளிய? "

ஷிவானி " ம்மா எப்போம்மா ஸ்ஸூல் போவோம்? "

ஷிவன்யா " ஹ்ம்ம் இன்னைக்கே உனக்கு போய் அட்மிஷன் போற்றலாம் குட்டி. ஆனா ஸ்கூல் திறந்துருப்பாங்களான்னு தான் தெரியல, சனிக்கிழமைல இன்னைக்கு. "

ஷிவானி " ம்மா ஷிவானிக்கு போர்டிக்குது (போரடிக்குது) ம்மா. ஷிவானிய வெள்ள (வெளியே) கூட்டுப் போ. " என முகத்தைச் சுருக்கினாள்.

எதையோ மீண்டும் யோசித்த ஷிவன்யா, பின் சரியென தலையசைத்து அவர்களின் அறைக்கு உடை மாற்ற ஷிவானியை அழைத்துச் சென்றாள்.

அன்னை மகள் இருவரும் தயாராகி விட்டு வீட்டை விட்டு வெளியேறினர். டக்சியில் செல்லலாமா பஸ்ஸில் செல்லலாமா என ஷிவன்யா ஒரு முடிவெடுக்கும் முன்பாக, அவளின் கரத்தை ஆட்டு ஆட்டென ஆட்டிய ஷிவானி " ம்மா ம்மா.. சீசா... சீசா.. அங்க போல்லாம்.. போல்லாம்! " என ஒரு பார்க்கைச் சுட்டிக்காட்டி குதியாய் குதித்தாள்.

ஷிவன்யா சாலையை கடந்து ஷிவானியை அங்கு அழைத்துச் செல்ல, விட்டால் போதுமென பம்பரம் கட்டி விடாத குறையாக அவள் கண்ட சிகப்பு நிற சீசாவை நோக்கி ஓடினாள் ஷிவானி. ஆனால் இருவர் விளையாடும் சீசாவில் ஒருவர் மட்டும் விளையாட முடியாதல்லோ.

திரும்பி அன்னையை ஷிவானி பாவமாய் பார்க்க, அவளின் பப்பி பேசை கண்டு பொருக்க இயலாமல் மற்றொரு பக்கம் போய் அமர்ந்தாள் ஷிவன்யா.

இவர்களை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சூர்யா தன் கேசத்தை கோதியவாறு ஒரு மரபெஞ்சில் அமர, அவரருகில் ஷிவானியின் வயதை ஒத்தச் சிறுவன் ஒருவன் கருப்பு லெதர் ஜக்கெட் அணிந்து கொண்டு, அதே மரபெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

விழியை மீற வழி இல்லை...Where stories live. Discover now