ஷிவன்யாவின் இதயம் எவ்வளவு தான் உடைந்து சின்னாபின்னமாகி இருந்தாலும் அதன் ஒரு சில்லு கூட யாதேஷை மீண்டும் காயப்படுத்தி விட கூடாதென்று ஆணித்தரமாய் முடிவெடுத்திருந்தாள். எவ்வளவு பயம் வந்தாலும் எவ்வளவு வலியை இவர்கள் அவளுக்குக் கொடுத்தாலும் அவை அனைத்தையும் பார்த்துவிட்டுத் தான் இனி ஓய்வாள் அவள்.
சாதனா " என்ன மாமியார், புருஷங்குற? இந்த வீடு என்னோடது! இங்க இருக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல. வெளியப்போ! "
விஜித்தா " அம்மா நிறுத்துங்க! " என கோவமாக முன்னே வர முயற்சிக்க, ஆரவ் அவளைத் தடுத்தான்.
அதே நேரம் ஆரவ் எண்ணத்தை பொய்க்காமல் ஏதோ காமெடி கேட்டது போல் வாய் மூடி சிரித்த ஷிவன்யா சாதனாவை சூடேற்றுவது போலவே அவள் பின்னலிட்ட கூந்தலை இழுத்து விளையாடிக் கொண்டே நகையாடினாள்.
" உங்கள நான் மாமியார்னு கூப்டாம வேற யாரு கூப்ட போறாங்க? இதோ நிக்கிறாங்களே ஒன்னாங்கலஸ்-ல இருந்து நீங்க பார்த்துட்டு இருக்க உங்க மருமக, இவங்களா? " என ஸ்வேத்தாவை ஒரு மிடுக்கான புன்னகையோடு பார்த்தாள்.
" வெரி சாரி மை டியர் மதர் இன் லா, உங்களுக்கு இந்த ஜென்மத்துல உங்க பையன் தொட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் தான் ஒரே மருமக. அப்பரம் எனக்கு இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டீங்களே? எல்லாம் உரிமையும் பத்துப் பொருத்தத்தோட பக்காவா இருக்கு மதர் இன் லா. நீங்க உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க, என் புருஷன் எழுந்ததும் எங்களோட மேரேஜ் செர்டிபிகேட்-அ காட்டி என் உரிமைய ப்ரூவ் பண்ணீடுறேன், "
சாதனாவின் முகத்தில் இப்போது உண்மையில் ஈ ஆடவில்லை. அவர் வெளிரிய முள்ளங்கி போல் சமைந்து நிற்க புசுபுசுவென ஏறிய கோவத்தோடு பற்களைக் கடித்தாள் ஸ்வேத்தா.
ஸ்வேத்தா " நாழு வர்ஷமா நீ இல்லாம நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். நீ...நீ எப்டி உயிரோட வந்த?! " என இவள் ஆவேசமாக சொற்களைக் கடித்து வீச, ஷிவன்யா அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
YOU ARE READING
விழியை மீற வழி இல்லை...
Romanceகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...