பெயர் தெரியா வலி: 14

26 3 3
                                    

காரிருள் மேகம் போல் சூழ்ந்திருந்த கருமையை கிழித்துக் கொண்டு வந்த ஒளி கீற்றின் உதவியில் பட்டென தன் துயில் கலைந்து எழுந்தாள் ஷிவன்யா.

ஒரு மருத்துவமனை கட்டிலில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு அவள் படுக்க வைக்கப்பட்டிருக்க, தன் மகளை அருகிலெங்கும் பார்க்காமல் தனிச்சையாய் எழுந்த பதட்டத்தில் அந்த ட்ரிப்சை பிடுங்கி எறிந்து விட்டு, கரத்தில் இரத்தம் வடிவதை கூட கவனிக்காமல், " ஷிவானி! " என கத்திக்கொண்டே அந்த அறையை விட்டு வேளியே ஓடினாள் நம் நாயகி.

தலை பாரத்தின் காரணமாக சரியாக நடக்க இயலாமல் ஷிவன்யா ஒரு கையை சுவற்றின் மீது ஊன்றி நிற்க, அவளது உலகமே ஒரு முறை அவள் கண்கள் முன்னே சுழன்று அடங்கியது.

ஷிவன்யா இப்படி அறையின் வாயிலில் தள்ளாடி நிற்பதை தூரத்திலிருந்து கண்ட அவன் பட்டென தான் தூக்கி வைத்திருந்த ஷிவானியை கீழே இறக்கி விட, அவள் அவன் எதிர்பார்ப்பை சற்றும் பொய்க்காது, " அம்மா! " என கத்தி அழைத்துக் கொண்டே ஷிவன்யாவிடம் ஓடினாள்.

தன் சேயின் குரல் கேட்டதும் பதட்டமாய் சுற்றி முற்றி நோக்கிய ஷிவன்யா, அவள் கால்களை வந்து கட்டிக் கொண்ட ஷிவானியை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

" ஷிவு பாப்பா, எங்க டா போன? அம்மா பயந்துட்டேன்! " என அவளே அறியாமல் ஷிவன்யா ஷிவானியை கட்டிக் கொண்டு அழுதாள்.

" அச்சு (அச்சோ ) அம்மா, நான் நல்லாக்கேன். ஒரு பிக் மேன் தான் உன்ன இங்க கூட்டீட்டு வந்தாரு. அவரு கூட தான் இருந்தேன், " என ஷிவானி அவளின் கழுத்தை கட்டியணைத்து நடந்ததை விளக்கினாள்.

" என்ன ஆச்சு பாப்பா? நம்மள கூட்டீட்டு வந்தவரு எங்க? " என நம் நாயகி அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவளை தாண்டி செல்ல முணைந்த ஒரு செவிலியர், " நீங்க எழுந்திட்டீங்களா மடம்? இப்போ எப்படி இருக்கீங்க? " என நலம் விசாரித்தார்.

" நான் நல்லா இருக்கேன். என்ன யாரு இங்க கொண்டு வந்தது? அவங்கள பார்க்கனும், " என ஷிவன்யா கூறவும் " அவரு ஃபீஸ் கட்டீட்டு இப்போ தான் கிளம்பிப் போனாரு மேடம், " என அச்செவிலியர் ஒரு பக்கத்தைக் காட்டியதும் அவருக்கு நன்றி கூறிவிட்டு ஷிவன்யா வேகமாய் ஷிவானியுடன் அந்த பாதையில் முன்னேறினாள்.

விழியை மீற வழி இல்லை...Where stories live. Discover now