அச்சம் பாதி நாணம் மீதி: 47

60 9 16
                                    

காலை புரண்டு செங்கதிரோன் புளர்ந்து நேரம் ஓடியிருந்தது. முதல் நாளுக்குப் பின் பள்ளி செல்ல குதூகலம் இழந்திருந்த ஷிவானியை கொஞ்சம் அரும்பாடுபட்டு கிளப்பிவிட்டு ஆர்யாவுடன் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு ஒரு வழியாக யாஸ் நிறுவனத்தின் முன் வந்து நின்றாள் ஷிவன்யா.

இரண்டு நாட்கள் முன் நடந்தவை பற்றி மீண்டும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலை ஷிவானியை பள்ளியில் இருந்து ஒன்றாக சேர்ந்து அழைத்து வந்த போது கூட யாதேஷ் ஷிவன்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. பள்ளியை பற்றி இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த அவன் மகளோடு தான் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

ஷிவானியைப் பற்றி ஏன் எந்த கேள்வியும் அவன் கேட்கவில்லை என ஒரு பக்கம் ஷிவன்யாவின் மனம் உருத்திக் கொண்டே தான் இருந்தது.

" ஹாய் மேம், குட் மார்னிங்! "

ஷிவன்யாவைப் பார்த்த உடனே அவளைக் கண்டு புன்னகைத்தாள் சித்ரா. எடிட்டோரியல் டீம்-இல் துருதுருவென சுற்றி வரும் குட்டி எம்ப்லாயி. பார்த்த உடனே அனைவருக்கும் அவளைப் பிடித்துவிடும். அத்தனை அழகு அவளுடைய சினேகமான புன்னகை.

" குட் மார்னிங் சித்ரா. "

சித்ரா அவளை இழுத்து அருகில் அமர வைத்து அவள் காதிற்குள் ஏதோ இரகசியம் பேசினாள்.

" சொல்லுங்க சொல்லுங்க நேத்து ஷிவன் பாஸும் நீங்களும் எங்க ஔட்டிங் போனீங்க? "

ஷிவன்யா பேந்தபேந்த விழித்துவிட்டு அவளை வினோதமாக பார்த்தாள்.

" ஔட்டிங் போனோமா? யார் சொன்னா அப்டி? "

பின்ன இல்லையா என்பது போல் அவளைப் பார்த்த சித்ரா தோளை சாதாரணமாக குளுக்கிவிட்டு " வேற யாரு சொல்லப் போறா? ஷிவன் பாஸ் தான் காலைலேந்து யமுனா வந்தாச்சா, யமுனா எப்போ வருவாங்க, யமுனா ஏன் இன்னும் வரலன்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வந்துட்டு போயிட்டாரே... அப்போ தான் சைடு கேப்புல நான் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். "

விழியை மீற வழி இல்லை...Onde histórias criam vida. Descubra agora