இரண்டாய் இருமனம்: 11

35 5 1
                                    

பந்தயம் கட்டிக் கொண்டு தயாராய் நின்றிருந்த மாணவர்கள் கூட்டத்தின் கரகோஷம், ஷிவன்யா மட்டும் தனியே வருவதை கண்டதும் மெல்லக் குறைந்தது. ஆரவ், ஷிவனேஷ் கூறிய இரு வாய்ப்புகளில் ஒன்றை தவறாமல், அவள் முறைத்தபடி வருவதையும், யாதேஷ் இவர்களது பக்கமே வராமல் பின் புறமாய் வகுப்பறைக்குச் செல்வதையும் கண்டு என்ன நடந்திருக்குமென ஓரளவு யூகித்திருந்தான்.

ஷிவன்யா அவர்களுருகில் வந்து தொப்பென அமரவும், ஷிவனேஷ் மற்றும் ஆரவ் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள, " பரவால்ல ஷிவாமா. அவன சரி பண்ணிக்களாம் நீ கவலப்படாத, " என கூறிவிட்டு யாதேஷை தேடி ஓடினான் ஆரவ்.

ஷிவனேஷ் அமைதியாய் ஷிவன்யா அருகில் அமர்ந்து அவளின் கரத்தின் மீது தன் கரம் வைத்து தட்டிக் கொடுத்தான். அதை கண்டு சூர்யாவும் ஷிவன்யாவின் மறுபக்கம் வந்து அமைதியாய் அமர, ஷிவனேஷின் தோளில் சாய்ந்து கொண்ட ஷிவன்யா, " அவரு புரிஞ்சிப்பாரு தானே? நான் ஏமாந்துட மாட்டனே? " என மிகவும் மெதுவாய் யாரிடம் கேட்கிறாளென்றே தெரியாமல் கேட்டாள்.

ஷிவனேஷ் தன் மௌனத்தை கடைப்பிடித்தாலும் அவன் பிடித்திருந்த அவளின் கரத்தில் மெதுவாய் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

சூர்யா " எது நடக்கனும்னு இருக்கோ... அது கண்டிப்பா நடக்கும் ஷிவா. அங்க என்ன நடந்துச்சு? " என கேட்டு கொண்டிருக்கும் பொழுதே, அங்கு ஏற்கனவே குழுமியிருந்த யாஷா கூட்டத்தினர் அவர்களின் கூட்டத்துத் தலைவன் ஆரவும் இல்லாமல், எண்ணற்ற கலந்தோசித்தலின் பின், ஆரவின் அசிஸ்டென்ட் எனப்படும் ஒருவனை ஷிவன்யாவிடம் அனுப்பினர்.

அவன் " ஷிவன்யா... உங்களால இன்னைக்கு பாட்டு பாட முடியுமா? " என பொருமையாய், அதே நேரம் அவனை ஏறிட்டுப் பார்த்த ஷிவனேஷின் பார்வையில் முறைக்கிறானோ என்ற பயத்திலும் தயக்கமாய் கேட்டவனை நிமிர்ந்து நோக்கினாள் ஷிவன்யா.

ஷிவன்யா " இன்னைக்கு யாருக்கோ பர்த்டேன்னு சொன்னீங்கல்ல? நான் பாடுறேன், நான் பாடுறேன். பர்த்டே கெர்ள் எங்க இருக்கீங்க? " என எழுந்து நின்று யாஷா கூட்டத்தினரைப் பார்க்க, ஒரு சலசலப்பிற்கு பின் சில சீனியர்களுக்கு மத்தியில் தள்ளப்பட்டாள் ஒரு பெண்.

விழியை மீற வழி இல்லை...Dove le storie prendono vita. Scoprilo ora