காதலென உயிரும் சொன்னதன்பே: 13

35 5 0
                                    

இரண்டு வாரமும் துள்ளிய நேரத்தில் கடக்க நம் நண்பர்கள் மூவரும் இறுதி ஆண்டின் கடைசி பரிட்சையில் அமர்ந்திருந்தனர். ஷிவன்யாவிற்கு முன்பே பரிட்சை முடிவடைந்திருக்க, இவர்களுக்கு இன்னமும் ஒரு பரிட்சை மட்டும் பாக்கி இருந்தது. யாதேஷிற்கு மட்டும் தனி இடத்தில் தான் என்றும் பரிட்சை நடக்கும். அவன் பதில் கூறக் கூற ஒருவர் எழுதுவார். நம் நாயகன் வகுப்பில் சிறந்தவனென்பதால் ஆசிரியர்களுக்கும் அவனை பற்றிய கவலை இல்லை.

ஆரவும் ஷிவனேஷும் ஒரே அறையில் அமர்ந்து கொண்டு ஈஅடித்துக் கொண்டே காப்பி அடிக்க இயலாத காரணத்தினால் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பாட்டு வரிகளைப் போல, தோன்றுவதை கிருக்கித் தள்ளி கொண்டிருந்தனர். பின்ன யாதேஷை சரி செய்கிறோமென இவ்விருவர் பரிட்சைக்கு படிக்கவில்லையே! ஷிவனேஷிற்காவது ஓரளவிற்கு பதில் தெரிந்து இருந்தது போல... ஆரவின் நிலை தான் கவலைக்கிடமாய் இருந்தது.

" ஹீரோக்கு ஃப்ரெண்டா இருக்கப் போய் என்ன இப்படி ஃபெய்ல் பண்ண பாக்குறீங்களே இறைவா! டேய், நீ மட்டும் என்ன டா எழுதீட்டு இருக்க?!! " என இடைஇடையே புலம்பிக் கொண்டு, தனக்குப் பின் அமர்ந்திருந்த ஷிவனேஷையும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆரவ்.

அவன் கவலை அவனுக்கு.

அவனைக் காப்பாற்றவே நண்பனுக்கு பாவம் பார்த்து தன் பரிட்சையை முடித்து விட்டு அவ்வறைக்குள் நுழைந்தான் யாதேஷ். யாதேஷை கண்டதும் ஆரவின் கண்களில் தானாய் பல்பெரிய, அங்கிருந்த ஒரு ஆசிரியரிடம் கூறிவிட்டு ஆரவருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

இது எப்போதும் நடப்பது தான். அவர்கள் இருவரும் நெருங்கியத் தோழர்கள் என்பதாலும், யாதேஷ் பார்வையற்றவன் என்பதாலும் ஆரவுடனே இவனை அமர வைத்து விடுவர்.

ஆரவ் " ஹப்பாடா வந்துட்டியா டா?! எனக்கு அன்சர சொல்லுடா... ஒரு 16 மார்க்குக்கு கூட அன்சர் தெரியல! " என முனுமுனுக்க, யாதேஷின் புண்ணியத்தாலும் தனது எழுத்தாற்றலினாலும் ஆரவ் அன்றைய பரிட்சையை வெற்றிகரமாய் முடித்திருந்தான்.

விழியை மீற வழி இல்லை...Where stories live. Discover now