அதே நாள் மாலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காய் இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் சிறிதாய் கச்சேரியே நடத்தினர். அதில் பலர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இருந்த போதே, ஷிவன்யா மேடையில் எங்கோ பார்த்த முகமொன்றை மீண்டும் கண்டாள்.
" நம் கல்லூரியின் காதல் மன்னன் வருகிறார், வருகிறார், வருகிறார்! " என்ற ஓலத்துடன் ஆரவ் ஒரு கிட்டாரை தூக்கிக் கொண்டு முன்னே வர, அவனின் பின் தன் வசீகரப் புன்னகையுடன், கருப்பு நிறத்தில் சாம்பல் நிற கோடிட்ட தனது கிட்டாரை தோளில் மாட்டியபடி நின்றான் யாதேஷ்.
யாதேஷின் கரங்கள் மைக்கை பற்றியதும் ஒரு மெல்லிய ஹம்மிங்குடன், " ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன்.
நான் இதை சொல்லியே ஆகனும், " என கூறியதும் கரகோஷம் பொங்க, " நீ அவ்வளவு...அழகு... " என அழுத்தி கிரக்கமாய் கூறிவிட்டு " த்ரீ, " என கூறினான்.அங்கு குழுமியிருந்த கல்லூரி மாணவர்களின் ஒரு சேர எழுந்த " த்ரி,டூ,ஒன்! " என்ற கரகோஷத்துடன் அந்த வளாகமே அதிர ஒலித்தது அவனது குரல்.
யாதேஷ் " முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே என பாடியவனின் நினைவில் ஷிவன்யாவின் நினைவே வந்துச் செல்ல ஒரு புன்னகையுடன் அருகில் நின்ற ஆரவிற்கு கை காட்டியவன் மேடையின் ஓரத்திற்கு பாடியடியே நடை கட்டினான்... "யாதேஷ் " வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... " என அவன் கூட்டத்தை நோக்கி கை நீட்ட அவனின் மாயக் குரலில் கட்டுடுண்டு கிடந்த ஷிவன்யாவின் கண்கள் குழப்பத்தில் சுருங்கியது...இது வருட வருட வழக்கமே. வருடா வருடம் யாதேஷ் பாடும் டூயெட்டில் உடன் முதல் வருட மாணவ மாணவிகள் யார் வேண்டுமானாலும் பாடலாம். அவன் கை நீட்டியதுமே பாதிக்கும் மேலான மாணவிகள் பயந்து பின் செல்ல, சிலர் இத்தனை பேர் முன் பாட வேண்டுமா என்ற பதட்டத்தில் பின் செல்ல, சிலர் உடனே ஒத்துக் கொள்ள வேண்டுமா என்ற பந்தாவில் பின் சென்றனர்.
DU LIEST GERADE
விழியை மீற வழி இல்லை...
Romantikகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...