வீட்டு வாசலில் வேறூன்றி நின்றிருந்த யாதேஷைக் கண்டு சாதனாவும் ஸ்வேத்தாவும் திகைக்க, திடுக்கிட்ட ஷிவன்யா அவன் முகத்தில் தெரிந்த சினத்தில் எச்சிலை விழுங்கினாள்.
நினைவு தெரிந்ததிலிருந்தும் அவனை தெரிந்ததிலிருந்தும் யாதேஷை இத்தனை கோவத்தில் அவள் பார்த்ததில்லை. என்றும் சிரித்த முகத்தோடு பார்ப்போரை கவரும் தன்னவனுக்கு கோவம் கூட வருமா என்ற திகைப்போடு நின்றவளை விஜித்தாவின் ஸ்பரிசம் உலகிற்குக் கொண்டு வந்தது.
விருவிருவென உள்ளே வந்திருந்தவனை விஜித்தா " அண்ணா! " என அழைத்து அவள் புறம் திருப்பியிருக்க, ஷிவன்யாவின் முன் சென்று எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் கை நீட்டி நின்றான் அவன்.
அவள் சிந்திக்கும் முன்பாக விஜித்தா இதற்காகவே காத்திருந்தது போல் அவள் அண்ணன் மற்றும் அண்ணி கைகளை கோர்க்க, யாதேஷ் " உன் ரூமுக்கு கூட்டீட்டுப் போ விஜி... வா, " என ஷிவன்யாவின் கரத்தை இறுகப் பற்றினான்.
இதுவரை இல்லாத இறுக்கம் அவளின் மணிகட்டைப் பிடிக்க, அவன் குரலில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்த கோவத்தில் பெண்கள் அனைவரும் பயந்தது உண்மை.
சாதனா " யா...யாதேஷ்...யாதேஷ்! கண்ணா! "
புரியாமல் நின்றிருந்த ஷிவன்யாவை விஜித்தா வழி நடத்த, சாதனாவின் அழைப்புகளை பொருட்படுத்தாமல் விஜித்தாவின் அறைக்குச் சென்றான்.
சாதனா " யாதேஷ்... எங்க போற?! நாங்க... நாங்க... யாதேஷ், "
என்ன பேசுவது என்ன சொல்வதென தெரியாமல் அவர் அவன் பின் ஓட, அவரை பின் தொடரவிருந்த ஸ்வேத்தா இரண்டு பைகளை கையில் தூக்கிக் கொண்டு மறுகையில் ஷிவன்யாவை பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவனை கண்டு பசை வைத்து ஒட்டியதைப் போல் அங்கேயே நின்றுவிட்டாள்.
ஷிவன்யா " என்னங்க! மாமா, என்ன பன்றீங்கங்க? மா... மாமா, நில்லுங்க, "
அவள் எவ்வளவோ முயன்றும் யாதேஷையும் பேச வைக்க முடியவில்லை. அவன் பிடியையும் லேசாக்க முடியவில்லை. சொல்லப் போனால் மேலும் மேலும் அவன் பிடியின் இறுக்கத்தைக் கூட்டிக் கொண்டே தான் போனான். வழியறியாமல் ஷிவன்யா விஜித்தாவை திரும்பித் திரும்பி பார்க்க, யாதேஷ் எதற்காகவும் காத்திருக்கவில்லை.
ŞİMDİ OKUDUĞUN
விழியை மீற வழி இல்லை...
Romantizmகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...