ஷிவன்யாவின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஷிவனேஷ் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருக்க, சூர்யா தான் அவ்வப்போது ஷிவனேஷை சுரண்டி விட்டுக் கொண்டே இருந்தார் ஷிவன்யாவை கவனிக்கச் சொல்லி. அங்கு ஏதோ எரிகிறது போல...
தீரா " சந்தேகப்படாதீங்க! நம்ம சூர்யா ரொம்ப நல்ல புள்ள! "
சூர்யா " என் பேச்ச கேப்பியா மாட்டியா? " என நட்ட நடு ஹாலில் நின்று கொண்டு கத்த, முன்னே நடந்து கொண்டிருந்த ஷிவனேஷோ ஒரு அலட்டலும் இல்லாமல் திரும்பி ஒரு பார்வை கொடுத்து விட்டு,
ஷிவனேஷ் " என்ன பிரச்சனை இப்போ? " என மிகவும் சாதாரணமாய் கேட்க, சூர்யா தான் ஏதோ நிலவிலிருந்து புதிதாய் ஒரு போரே வரப் போகிறதென கூறியதுபோல குதித்துக் கொண்டே அவனை பின் தொடர்ந்தார்.
சூர்யா " என்ன தான் இல்ல? ஷிவாவ பத்தி யோசிக்க மாட்டியா நீ? அவ எந்த பாதைல போறான்னு தெரியிதா இல்லையா உனக்கு?! "
ஷிவனேஷ் " ஏன் தெரியாம? நல்லாத் தெரியிதே, "
சூர்யா " ஷிவா... என்ன கோவமாக்காத! அவ யாதேஷ லவ் பன்ற மாதிரி சுத்தீட்டு இருக்கா! "
ஷிவனேஷ் " மாதிரி இல்ல, லவ் பண்ணீட்டு தான் இருக்கா. "
சூர்யா " இது வேறையா?! வீட்டுல தெரிஞ்சா என்ன ஆகும்?! " என கேட்ட சூர்யாவின் குரலில் அப்பட்டமாய் பயம் பரவி இருந்தது.
ஷிவனேஷ் " ஒன்னும் ஆகாது. "
சூர்யா " ம்ச் ஷிவன்யா சின்ன பொண்ணு! அவளுக்கு நீ தான் சொல்லி புரிய வைக்கனும்! "
ஷிவனேஷ் " அவளுக்கு இன்னும் 6 மாசத்துல 20 வயசாகப் போகுது சூர்யா. அதோட அவ ஒரு முடிவெடுத்தா அத சரியா தான் எடுப்பா, ஒரு முடிவெடுத்துட்டா அத மாத்திக்கவும் மாட்டா. அத விட இப்போ அவளுக்கு அவ அப்பாவோட முழு சப்போர்டும் இதுல இருக்கு. யாரு குறுக்க நின்னாலும் அவ பின் வாங்க மாட்டா. " என தன் நடையை தொடர்ந்தபடியே கூறினான்.
சூர்யா " ஹையோ, குடும்பமே ஏன் டா இப்படி இருக்கீங்க?!? யாதேஷ் பத்தி யோசி டா!! அவங்க வீட்டுல ஒத்துப்பாங்களா? "
ESTÁS LEYENDO
விழியை மீற வழி இல்லை...
Romanceகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...