யாதேஷ் மற்றும் ஆரவின் பதிலுக்கு பதிலடி பேச்சுக்களிலும், ஷிவனேஷ் மெடிட்டேஷன் செய்வது போல் நீட்டி வந்த அமைதிக்கும் இடையில் ஷிவன்யா எங்கே செல்கிறோம் என்ற கேள்விக்கே விடையில்லாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
யாதேஷ் அவ்வப்போது அவளை சீண்டிக் கொண்டே வந்தாலும் அவளது அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவன் பதில் கூறவில்லை. நல்லவேளையாக ஷிவன்யாவின் பொருமையை மேலும் சோதிக்காமல் ஆரவின் வண்டி ஒரு அழகிய வீட்டின் முன் சென்று நின்றது.
அந்த இரண்டுமாடி வீட்டை புதிதாய் பார்த்த ஷிவன்யா, அவளுக்கு முன்பாக சென்ற யாதேஷை பிடிக்க இயலாமல் அப்போதே கீழே இறங்கிய ஷிவனேஷை பிடித்து உலுக்கினாள்.
" யாரு வீடு இது? எங்க வந்து இருக்கோம் நாம?! "
ஆனால் ஷிவனேஷ் அவளுக்கு குனிந்து பதில் தரும் முன்பாக, தன் கையை பிடித்துக் கொண்டு கீழே இறங்கியவள் தன்னை பின் தொடரவில்லை என்று உணர்ந்து மீண்டும் ரிட்டர்ன் வந்தான் யாதேஷ். " டேய் அவ எங்க டா? ஆ இங்க இருக்கியா! வா உள்ள போலாம், "
ஷிவன்யா வாயைத் திறக்கும் முன்பாக யாதேஷ் அவளை இழுத்துச் சென்றிருந்தான். இவன் காதலை ஒப்புக் கொண்டதும் தான் ஒப்புக்கொண்டான், இவன் செய்யும் அனைத்தும் தாறுமாறாக தான் இருந்தது.
கதவை இவன் திறந்த அடுத்த நொடி வீலென கத்திக் கொண்டே, ஒரு பெண் எங்கிருந்தோ அவர்களை நோக்கி ஓடிவந்தாள்.
" நீங்க தான ஃபர்ஸ்ட் இயர் குயிலி அக்கா? " என கண்களில் நட்சத்திரங்கள் மின்ன சிரித்தாள் விஜித்தா.
அவளை கண்டு பேந்தபேந்த விழித்த ஷிவன்யா, யாதேஷை பார்த்துக் கொண்டே " உங்களுக்கு எப்டி தெரியும்? "
விஜித்தா அதற்கு பதில் அளிக்காமல் மீண்டும் வீலென கத்த, ஷிவன்யா படக்கென யாதேஷின் முதுகுக்கு பின் ஒழிந்து கொண்டாள்.
" அவளுக்கு வேற வேலை இல்ல ஷிவா... இந்த ஒருவர்ஷத்துல எங்க கூட எந்த பொண்ண பார்த்தாலும் அத தான் கேட்பா அவ. இன்னைக்கு நீயே வந்துட்டா அதான் குஷி ஆய்ட்டாங்க உன் நாத்தனார், " ஆரவ் அவர்களை பார்த்து சிரிக்க, கத்தி முடித்திருந்த விஜித்தா இப்போது ஷிவன்யாவை கண்டு புன்னகைத்தாள்.
KAMU SEDANG MEMBACA
விழியை மீற வழி இல்லை...
Romansaகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...