தன் தாய்மடி சாய்ந்த மதிக்கு டாட்டா காட்டிவிட்டு உற்சாகத்தோடு உலகைக் காண வந்த ஆதவனின் கதிர்வீச்சில் யாதேஷின் கண்கள் குருகுருத்தது.
இவ்வளவு நேரமும் காலம் போவதை அறியாமல் அவன் உறங்கும் அழகை இரசித்துக் கொண்டிருந்த பெண்ணவள் அதை கண்டு படாரென கண்கள் மூடி படுத்துக் கொண்டாள்.
அவள் எதிர்பார்த்தது போல் கண்களை மெல்லத் திறந்த யாதேஷ் மென்மையாய் அவள் முகம் நோக்கி அவன் கையை உயர்த்த, மூச்சை இழுத்துப் பிடித்திருந்த ஷிவன்யா அவன் விரல்கள் பட்டும் படாமல் அவள் நெற்றியில் இறகு போல் தவழ்ந்ததில் உடல் சிலிர்த்தாள.
" குட் மார்னிங், " என மெல்லிய குரலில் கூறிக் கொண்டு மேலும் அவள் நெற்றியில் தவழ்ந்த கற்றை முடியோடு சற்று விளையாடிவிட்டு எழுந்து தன் காலைக்கடன்களை பார்க்கச் சென்றான் நம் நாயகன்.
கோவப்பழமாய் சிவந்திருந்த ஷிவன்யா அவன் சென்ற அடுத்த நொடி, வாயை இறுக்கி மூடிக் கொண்டு அவள் கைகளுக்குள்ளே வீலென கத்திவிட்டு அவன் தலையணையை இழுத்து அணைத்துக் கொண்டாள். காதல் கொண்ட பள்ளி மாணவளைப் போல் அவர்களின் பாயிலே புரண்டு கொண்டிருந்தவள் யாதேஷ் குளித்துவிட்டு வரும் அரவம் கேட்டதும் எழுந்து ஓடியே விட்டாள்.
தன் நாயகியின் மனதை இப்படி அட்டகாசம் செய்ய வைத்தது தெரியாமல் எப்போதும் போல வேலைக்குத் தயாராகி கீழே இறங்கிய யாதேஷை, வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாமரை பார்த்துவிட்டு சத்தமாக கத்தி அவனை அழைத்தார்.
" டேய் படவா! வீட்டுல உன்ன நம்பி ஒரு புள்ள இருக்கா, நீ அவள பார்க்காம கண்ட நேரத்துல வீட்டுக்கு வருவியா?! நேத்திக்கு எத்தனை மணிக்கு வந்த நீ?! பத்து பதினோரு மணி வரை வேலைய கட்டீட்டு அழுவனுமுன்னா அவள எதுக்கு கல்யாணம் பண்ணி கொண்டு வந்த?! "
அவர் தன்னவள் மீது வைத்துள்ள பாசத்தில் சிரித்த யாதேஷ், " எல்லாம் நீங்க இருக்க தைரியம் தான், லோட்டஸ்! "
CZYTASZ
விழியை மீற வழி இல்லை...
Romansகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...