ஷிவனேஷ் சொன்ன அடுத்த நொடி ஷிவன்யாவின் கண்கள் வேகமாக அவளவனிடம் தான் ஓடியது. அவன் தலையில் கை வைத்து நின்ற தோரணமே தனக்குத் தெரிய வேண்டாமென்று தான் இந்த விஷயத்தை மூடி வைத்திருக்கிறான் என ஷிவன்யாவிற்கு புரிந்தது.
அங்கு நீடித்த அமைதியை கலைக்க விரும்பாத நண்பர்கள் இருவரும் அருகருகே செட்டிலான சில நொடிகள் பின்னே யாதேஷ் பெருமூச்சோடு அமைதியாக நின்ற ஷிவன்யாவிடம் சென்றான்.
" யமுனா... "
அவளிடம் எந்த பதிலும் இல்லை. ஏதோ தீவிரமான யோசனையில் இருந்த ஷிவன்யாவின் கண்கள் ஏதோ ஒரு நிலையில்லாத புள்ளியில் நிலைக்குத்தி நின்றிருந்தது.
" யமுனா ஏன் டி அமைதியா இருக்க? " யாதேஷ் அவளை ஒரு பயத்தோடே மெல்ல உலுக்க, யோசனையில் இருந்து பட்டென வெளியே வந்த ஷிவன்யா கேட்ட முதல் கேள்வியே யாதேஷை பாவமாக பார்க்க வைத்தது.
" ஏன் நீங்க இத முன்னாடியே சொல்லல...? "
" இது வேணாம் டி... "
" மாமா என்னாச்சு உங்களுக்கு? உங்க கண் பார்வை இல்லாம நீங்க படுற கஷ்டத்தையெல்லாம் நாங்க பார்த்துட்டு தான இருக்கோம்? அதுக்கெல்லாம் தீர்வா ஒரு வழி இருக்குறப்போ ஏன் வேணாம் வேணாங்குறீங்க? இது நல்ல ஐடியாவா தான் மா தோனுது... இன்னும் கொஞ்சம் நாம யோசிக்கலாம்... உங்களோட கண்ணு— "
" யமுனா ப்லீஸ்... உன்ன விட இந்த கண்ணு எனக்கு அவ்ளோ முக்கியம் இல்ல டி, "
ஷிவன்யா சமைந்து நின்றவுடன் யாதேஷ் வலி தோய்ந்த குரலோடு அவள் கன்னத்தை ஒரு கரத்தால் ஏந்தினான்.
" நான் சொன்னா புரிஞ்சிக்கோ ப்லீஸ்... இந்த இருட்டு என்னோட வாழ்கையாய்டுச்சு, நான் என் வாழ்கைய எப்பவும் போல வாழ பழகீட்டேன்... சரி ஒத்துக்குறேன், நான் கண்ணில்லாம கஷ்டப்பட்டேன் தான்... ஆனா அது உன்ன பார்க்க முடியலையேங்குற ஒரே காரணத்துக்காகத் தானே தவிர என் வாழ்கைல அது ஒரு குறையாவே இல்ல டி... போனது போய்டுச்சு திரும்ப அத கொண்டு வர போய் நான் உன்ன இழந்துட்டா என்னால...என்னால எதுவுமே செய்ய முடியாது டி, "
ESTÁS LEYENDO
விழியை மீற வழி இல்லை...
Romanceகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...