விழிகளின் சங்கமம்: 7

89 6 11
                                    

விஜித்தா " ஆரவ்! ஆரவ் என்னடா ஆச்சு? இட்ஸ் ஓக்கே இட்ஸ் ஓக்கே... அழாத ஆரவ்! என்ன ஆச்சு? "

விஜித்தா கட்டியணைத்திருந்த ஆரவின் கண்ணீர் நில்லாமல் ஓட, மற்ற இருவருக்குமோ பயத்தில் உடல் வெடவெடக்காத குறை தான். அவர்களை மேலும் காக்க வைக்காமல் பதட்டமாய் வெளியே வந்தார் மருத்துவர் ராக்கேஷ்.

ராக்கேஷ் " ஆரவ்! ஆரவ் யாதேஷுக்கு என்னாச்சு? நீ பார்க்கும் போது அவன் என்ன நிலமைல இருந்தான்?  தெளிவா சொல்லு. "

ஆரவ் " அது... டாக்..டர்... யாது— " என ஆரவ் அழுகையின் இடையில் திக்கித் தினற, அவனது அழுகை அபூர்வமாக தெரிந்தது சாதனா மற்றும் ராக்கேஷிற்கு.

விஜித்தா " அங்கில் ப்லீஸ், நீங்க இப்போ அண்ணன பாருங்க. ஆரவ எதுவும் கேக்காதீங்க. " என ஆரவின் முன் வரவும், பெருமூச்சிட்ட மருத்துவர் ராக்கேஷ், " யாதேஷ் இன்னைக்கு பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும் விஜி... இப்போ நல்லா இருக்கான்... ஒன்னும் இல்ல. நான் நெனச்ச மாதிரியே நாம ரிமூவ் பண்ண க்லாட் அவனுக்கு இன்னும் குடைச்சல் குடுத்துட்டுத் தான் இருக்கு போல. ஏதோ மைண்ட ரொம்ப நேரம் ஸ்ற்றெஸ் பண்ணீர்க்கான் விஜி. நல்லவேளை ஆரவ் சீக்கிரம் இங்க கூட்டீட்டு வந்தான், " என அவர்களை நிம்மதியாய் இருக்கவும் விடாமல் கத்திக் கதறவும் விடாமல் பாதியை கூறிவிட்டு ஆரவை தனியே அழைத்துச் சென்றார்.

ஆரவ் " டாக்டர் உண்மைய சொல்லுங்க, நான் அங்க போனப்போ யாதேஷ் ஆழ்ந்த தூக்கத்துல இருந்தான். அவன் சின்ன சத்தம் கேட்டாலே எந்திரிச்சிடுவான். ஆனா நான் எவ்ளோவோ கத்தியும் அவன் எந்திரிக்கல டாக்டர். ப்லீஸ்— ப்லீஸ் உண்மைய சொல்லுங்க. முன்னாடி நடந்தது தானே திரும்ப நடக்குது? "

ராக்கேஷ் " ஆமா ஆரவ். யாதேஷ் அவனோட மறந்து போன நினைவுகள தான் தேட முயற்சி பண்ணீருக்கான். அதுக்காக அதுக்குள்ள தன்னோட கன்ட்ரோல இழக்குர முடிவ பயன்படுத்தீருக்கனும். அவன் மென்ட்டலாவும், ஃபிசிக்கலாவும் இந்த வலிய தாங்கிக்க தயாரா இல்ல. இப்போதிக்கு தூங்கட்டும், காலைல எந்திரிச்சிடுவான். " என அவனின் தோளை தட்டி நகரப் போனவர் இடையிலே நின்று, " அப்பரம்... நடுவுல ஷிவா ஷிவான்னு சொல்லீட்டு இருந்தான் ஆரவ், " என கூறிவிட்டுச் சென்றார்.

விழியை மீற வழி இல்லை...Opowieści tętniące życiem. Odkryj je teraz