கும்மிருட்டிற்கு மத்தியில் எங்கோ ஒரு மங்கிய ஒளி மறைந்து மறைந்து அவன் இருந்த அறையை ஒளியூட்ட, அவனவளின் குரல் அவனை சுற்றி சுற்றி இம்சித்தது.
' மாமா... மாமா, என்ன விட்டு எங்க போனீங்க? ஏன் போனீங்க? '
கண்ணீர் மழ்கிய அவள் குரலை கேட்ட நொடி இவன் மனதை யாரோ குத்திக் கிளிப்பதை போல் இருந்தது. அவளின் மெல்லிய அழுகுரலும் விம்மலும் இவனை ஏதோ செய்ய, அவளை அழைத்து அழைத்துப் பார்த்தான். ஆனால் முதல் முறையாக அந்த இருளில் அவளை கண்டறிய இயலாமல் தடுமாறினான். கண் பார்வையில்லாத வலி அவனை அப்போது வாட்டியது.
" யமுனா...யமு— யமுனா அழாத டி! "
ம்ஹும்... அவன் சொல்லைக் கேட்க மாட்டேன் என சபதம் எடுத்திருந்தாள் போல. மேலும் மேலும் அவள் அழுகை அவன் வலியை கூட்ட, ஏதோ திக்குத்தெரியாத காட்டில் தொலைந்த யாதேஷை ஒருவாறு காப்பாற்றி எழுப்பிவிட்டது காலை ஒரு மணிக்கெல்லாம் அலறிய அவன் அலாரம் தான்.
வேர்த்துவிருவிருத்து படாரென கண்களைப் பிரித்தவன், பெருமூச்சோடு மீண்டும் இமைகளை மூடி கொண்டான். என்ன மாதிரியான கனவோ தெரியவில்லை. நம் நாயகனை இப்படித் தான் கடந்த இரண்டு நாட்களாக இம்சித்துக் கொண்டிருக்கிறது.
வாய்க் க்லாக்கின் வழி மணி அதிகாலை 01:02 என அறிந்து கொண்ட யாதேஷ், தொப்பலாய் நனைந்திருந்த அவன் கேசத்தை கோதி பின்னுக்கேத் தள்ளினான்.
அருகிலே உறங்கிக் கொண்டிருந்த ஆரவ் புரண்டு படுத்துக் கொண்டே, " ஏன் டா மாக்கான் மாதிரி நடு ராத்திரியில ஏன்ச்சு உக்காந்திருக்க?! "
" மச்சான்... அவ நினைப்பாவே இருக்கு டா... "
கண்களை மீண்டும் திறந்து, நடுராத்திரியில் கட்டில் மீது புத்தர் போல் அமர்ந்திருந்தவனை ங என பார்த்தான் அவன்.
" டேய் இதுக்கெல்லாம் ஒரு நேரங்காலம் வேணாமா டா? "
" என்னால தூங்க முடியல டா! அவ குரல் கேட்டுட்டே இருக்கு, எனக்குத் தூக்கம் வரல! "
YOU ARE READING
விழியை மீற வழி இல்லை...
Romanceகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...