ஷிவானியின் பள்ளியை அன்னாந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கிய ஷிவன்யா யாதேஷைத் திரும்பி பார்க்க அவனும் காரை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.
பள்ளியும் முடிந்துவிட்டது. அலைமோதும் பொற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே அந்த சத்தமான மைதானத்திலும் ஷிவானியின் குதூகலமான " அம்மா அப்பா! " என்ற கூவல் அவர்களை விரைவாகவே வந்தடைந்தது.
இவர்களுக்கு சில அடி தூரத்திலே குழந்தைகளை அழைக்க வந்த சூர்யாவின் கையைப் பிடித்து தன் தாய் தந்தையைப் பார்த்த குஷியில் குதித்துக் கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை.
ஆர்யாவும் " அத்த! " என ஷிவன்யாவிற்கு உற்சாகமாய் கை காட்ட, சூர்யா இவ்விருவரையும் கண்டு முளித்தாள்.
ஷிவனேஷின் அருமையினால் ஒரு வாரம் முன்பு நடந்ததையும் இந்த ஒரு வாரமாக யாதேஷ் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமவல் எங்கோ சென்றுவிட்டான் என்பதையும் அறிந்திருந்த சூர்யா அந்த கணவன் மனைவி இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.
அருகே வந்ததுமே தன்னிடம் தாவி குதித்த மகளை ஆசையாய் அள்ளி அணைத்துக் கொண்டான் யாதேஷ்.
" ஹாய் தங்கோ. எப்டி இருக்கீங்க? "
ஷிவானி " நான் ரொம்ப நல்லாக்கேன்ப்பா! நீங்க எங்க போன? ஷிவானி உங்ள தேடுனேன், " என அழகாய் உதட்டைப் பிதுக்கி பாவமாய் முகத்தை வைத்துக் கொள்ள, அவள் குறும்புத்தனம் அறியாத யாதேஷிற்கு மனம் வெம்பிவிட்டது.
" அப்பா ஸாரி பேபிடால். அப்பாக்கு கொஞ்சம் பெரிய வேலை. அதான் உங்கள பார்க்க வர முடியல. ரொம்ப தேடுனீங்களா அப்பாவ? "
ஷிவானி ம்ம் ம்ம் என தலையை பாவமாய் ஆட்ட தங்கள் மகளை நன்கு அறிந்த ஷிவன்யா லேசாக அந்த குட்டி வாண்டை மிரட்டிப் பார்த்தாள்.
" ஏய் வாண்டு நடிக்காத டி, இல்லனா அப்பா வாங்கீட்டு வந்த பிஸ்கெட் எல்லாம் அம்மா ஒளிச்சு வச்சிருவேன். "
அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கண்களை நான்கு மீட்டருக்கு அகல விரித்த ஷிவானி தன் இரண்டு குட்டி கைகளையும் யாதேஷின் கன்னத்தில் வைத்து கண்கள் சிரிக்க அவனைப் பார்த்தாள்.
CZYTASZ
விழியை மீற வழி இல்லை...
Romansகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...