ஷிவனேஷ் மற்றும் யாதேஷ் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக நிற்க, ஆரவின் காதை கடித்தாள் ஷிவன்யா.
" அண்ணா! என்னண்ணா இது?! ஹிட்லர் என்ன டக்குன்னு வந்துட்டாரு?! மாமாக்கு தலைவலி வந்துட்டா—
" ஷிவா கூல்... எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணிக்கலாம். எனக்குத் தெரிஞ்சு உன் புருஷன் மெமரீஸ்-அ ட்ரிகர் பண்றது தான் கரெக்ட்டா இருக்கும். "
" ட்ரிகர் பண்ணனுமா? அண்ணா அவருக்கு எதாவது ஆய்ட்டா—
" பக்கத்துலேயே ஹாஸ்பிட்டல் இருக்கு டா தங்கம். "
" யோவ் அண்ணா! விளையாடுறீங்களா?! "
" ஓய்! என்ன மரியாதை எல்லாம் கொறையிது? "
" பெருமாளே... ஏன்யா என்ன சோதிக்கிற? " என விட்டத்தை பார்த்து கைகளை தூக்கிய ஷிவன்யா பின் அவளை ஏறஇறங்க பார்த்த ஆரவை கண்டு, " அண்ணா, நான் சீரியஸா கேக்குறேன் அண்ணா. இப்போ என்ன ட்ரை பண்றீங்க? "
" எல்லாம் நல்லதுக்கு தான் டா, "
" என்ன நல்லதுக்கு சொல்றீங்க? அவரு செல மாதிரி நின்னிட்டு இருக்காரு... "
இவ்வாறாக இவர்கள் ஒரு பக்கம் ஒருவர் காதை இன்னொருவர் கடித்துக் கொண்டிருந்த போது இன்னமும் தன்னை ஏதோ நெப்ட்யூன்-இல் இருந்து வந்த அதிசயப்பிறவியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டு புன்னகைத்தான் ஷிவனேஷ்.
" என்ன யாதேஷ், உங்களுக்கு என்ன நியாபகம் இல்லையா? நான் உங்களோட ஒன் ஆஃப் தி பார்ட்னர். நாம கூட ஒன்னா ஒரே காலேஜ்-ல தான் படிச்சோம். "
ஷிவனேஷ் ஒரு பக்கம் தன்னை பல வருடம் முன்பு பார்த்த ஒரு மாணவனிடம் தன்னை அறிமுகம் செய்வது போல் ஒரு பட்டியலைத் துவங்க, அவனையே உருத்து நோக்கிக் கொண்டிருந்த யாதேஷ் அவர்கள் மீது அலட்டலின்றி ஒரு அணுகுண்டை தூக்கி வீசினான்.
" ஷிவா... நீ... எங்க போன இவ்ளோ நாளா? நீ... நீ ஏன் காணும்? நீ... நீ ஷிவா... யமுனா உன்னோட ஹிட்லர்... ஷிவா நீ ஆனா... "
BẠN ĐANG ĐỌC
விழியை மீற வழி இல்லை...
Lãng mạnகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...