என்றும் போல் காலையிலே கிளம்பி விட்டு கன்ட்டீன் பக்கம் வந்த ஷிவன்யா சகமாணவிகள் தோசை உண்டவாறே காஃபீக்காய் காத்திருப்பதை கண்டதும் முகத்தை சுழிக்க, அவளை கண்டுவிட்டு இரு தட்டுக்களுடன் அவளிடம் வந்தாள் அத்விகா.
அத்விகா " என்னாச்சு ஷிவு? "
ஷிவன்யா " ஹான் ஒன்னும் இல்லம்மா... இவங்கலாம் எப்படி காலங்காத்தால சாப்பாடோட காஃபீ குடிக்கிறாங்க?! உவக்! எனக்கு கொமட்டிக்கிட்டு வந்துடும்! " என பாவமாய் கூற, சிரித்துக் கொண்டே தலையை அசைத்த அத்விகா, ஷிவன்யாவை அழைத்துக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.
யாதேஷ் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். என்ன தான் அவனின் கல்வி அனைத்திற்கும் முன் தெரிந்தாலும், உண்மையில் அவனாலும் ஷிவன்யாவை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. முதல் ஒரு வாரமே அவளின் அரவம் எதையும் கேட்காமல் அவளையும் உணராமல் இருந்தவனுக்கு ஏதோ போலிருந்தது.
அவளின் கொலுசு சத்தமோ வளையல் சத்தமோ கேட்காமல் அவளை சுற்றுவட்டாரத்திலே உணரவும் இயலாமல் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறத் தொடங்கியிருந்தான். அவனை மேலும் கடுப்பேற்றுவதை போல ஆரவ், ஷிவனேஷ் இருவரும் ஷிவன்யா என்ற ஒரு மனிதபிறவியே இல்லாததை போல நடந்து கொண்டனர்.
ஆரவ் " டேய் மச்சான்... பராக்கு பார்த்தது போதும் இங்க பாருடா! "
யாதேஷ் " பார்த்தா மட்டும் தெரியவா போகுது?! நான் எங்க பார்த்தா உனக்கென்ன டா?! உன் வேலைய மட்டும் பாரேன். "
ஆரவ் " அப்பரம் கழுத்து வலி வந்தாலும் நீ என் உயிர தான வாங்குவ!? அப்போ பாத்துக்குறேன்... "
யாதேஷ் ஒரு நீண்ட அமைதியின் பின் லேசாக தொடங்கினான். " டேய்... அவள பாத்தீங்களா...? "
ஆரவ் " எவள...? "
யாதேஷ் " அதான்... "
ஷிவனேஷ் " அதான்னுலாம் எங்களுக்கு யாரையும் தெரியாது டா. "
யாதேஷ் " டேய் கடுப்பேத்துறீங்களா என்னைய?! அவள பாத்தீங்களா, இல்லையா? "
VOUS LISEZ
விழியை மீற வழி இல்லை...
Roman d'amourகண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வ...