மதுரை மருத்துவ கல்லூரியின்
முன் சட்டென் ப்ரேக் (Sudden Break) அடித்து நின்றது சக்தியின் ராயல் என்பீல்டு (Royal enfield).அவன் வந்து நின்ற வேகமே அவனது கோவத்தை எடுத்துக் காட்டியது.
நுழைவாயிலின் அருகே சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலாளி அருகில் சென்றவன்.
இங்க லேடிஸ் ஹாஸ்டலுக்கு எந்த பக்கம் போகனும்...என்றான்.
உள்ள போய் வலது பக்கம் திரும்புங்க இரண்டு பிளாக்(Block) இருக்கும் அது தான் லேடீஸ் ஹாஸ்டல் என்றவர் மீண்டும் தன் வேடிக்கை பார்க்கும் வேலையை தொடங்கி விட.,
சக்திக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.
ரெண்டு பில்டிங்ல எதுல இவ இருக்கானு தெரிஞ்சிக்கிறது.இடியட் என் டைம் தான் வேஸ்ட் ., என மனதினுள் அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான்.
இன்னும் கிளம்பாமல் அவன் அப்படியே நிற்பதை கவனித்தவர்.என்னப்பா போகாம இங்கயே நிக்கிறிங்க அதான் வழி சொல்லிட்டேனே.
ஹான் அது அங்க
எந்த ஹாஸ்டல்ல இப்போ ஹவுஸ்சர்ஜன்சி பன்றவங்க இருப்பாங்கனு சொல்ல முடியுமா...Block 2 ல தான் இருப்பாங்க.
சரிண்ணா ரொம்ப தேங்ஸ் என்றவன் கல்லூரியின் உள்ளே சென்றான்.
காலை வேளை என்பதால் மருத்துவ மாணவர்கள் சிலர் கோட்டை அணிந்துக் கொண்டும் சிலர் அதை கையில் வைத்தபடி ஆங்காங்கே நின்றுக் கொண்டிருக்க.,
சக்தி பிளாக் 2 வை நோக்கிச் சென்றான்.தன் மொபைலில் பிசாசு என பதிவு செய்திருந்த நம்பரை வேண்டா வெறுப்பாக தட்ட...அழைப்பு ஏற்கபடாமல் கட்டானது, கடுப்பானவன் மீண்டும் மீண்டும் முயற்சிக்க அழைப்பை அவள் எடுக்கவில்லை .
ஓ மை காட் என்ன பன்னி தொலையிராலோ. ச்ச ,,.என கோவத்தில் அருகிலிருந்த கல்லை ஓங்கி உதைத்தான்.அதற்கு பலனாய் வலியையும் அவனே பெற்றுக்கொண்டான்.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ