சக்தி எப்போதும் போல் மேஹாவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தான்.
அவன் வந்து பத்து நிமிடங்களுக்கு மேல் கழிந்திருக்கும்.மேஹா கீழிறங்கி வரவில்லை.அவன் வருமுன் காத்திருப்பவள் இன்று வரவில்லை.மேலே சென்றுப் பார்க்கலாம் என அவள் ப்ளாட்டை நோக்கிச் சென்றான். போகும் வழியில் கருப்பு நிற BMW கார் ஒன்று நிற்க அதைப் பார்த்துக் கொண்டே போனான்.அங்கு மேஹாவின் ப்ளாட்டிற்கு வெளியே நான்கு காட்ஸ் நிற்க அதை வைத்து மேஹாவின் தந்தை வந்திருப்பதை யூகித்துவிட்டான்.
உள்ளே நுழைந்தவுடன் ..,.
"என் கூட வந்துரு மேஹா ",..என்ற அவள் தந்தையுடன் குரல் அந்த அறையில் கணீரென ஒலித்தது.அவர் கோட் சூட்டீல் கோடீஸ்வரன் என்ற மிடுக்குடன் இருக்க அவர் முகத்தில் அவ்வளவு கோவம்.
மேஹாவும் அவருக்கு சளைத்தவள் அல்ல."என்னால வர முடியாது "...தீர்க்கமாக...
""இங்க இருக்கறது உனக்கு சேப் இல்ல. அங்க உன் அம்மாவும் தம்பியும் உன்ன நினைச்சி கவலப்படுறாங்க புரிஞ்சிக்கோ "...என்றவரின் குரலில் கெஞ்சலும் இருந்தது கோவமும் இருந்தது.
"அம்மா என்ன நினைச்சி ஃபீல் பன்றாங்களா.எப்படி அவங்களுக்கு என் நியாபகம் வந்துச்சு.அவங்க லேடீஸ் க்ளப் செக்ரட்ரியாச்சே .அதுல உள்ள வேலைய பார்க்கவே அவங்களுக்கு டைம் இருக்காது"...என்றவள் அலட்சியமாய் இதழை வளைத்தபடி ...
"கௌஷிக் தான் பாவம்.ஒரு பக்கம் பிஸ்னஸ் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு பிஸ்னஸ் பின்னாடி ஓடுற நீங்க இன்னொரு பக்கம் லேடீஸ் க்ளப் செக்ரட்ரி காவ்யா இவங்களுக்கு இடையில மாட்டிக்கிட்டு அவஸ்தபட்றான். அந்த மாதிரி என்னால அவஸ்தப்பட முடியாது ",..என்றாள்.
"மேஹா "...என்றவருக்கு கோவத்தில் கண்கள் சிவந்துப் போனது.
"நீங்க என்ன மிரட்டுனாலும் நான் உங்க கூட வரமாட்டேன் "...
"முட்டாள் நீ இங்க இருந்தா உன் உயிருக்கே ஆபத்து. "...என்க.,.
"அதுக்கு காரணம் யாரு நீங்கதான.ஒழுங்கான வழியில கம்பெனிய நடத்தியிருந்திங்கனா இவ்வளவு எதிரிகள சம்பாதிச்சிருந்திருப்பிங்களா.நீங்க பன்ன பாவம் தான் உங்க பொண்ணா பழிவாங்கத் துடிக்குது.அது நடக்கனும்னு இருந்தா நடக்கட்டும். ஐ டோன்ட் கேர் ",..என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ