யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க வழியில் உள்ள கல்லை அகற்றியவர்கள் அவளது ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி வைத்தனர்.நடுக் காட்டிற்கு இழுத்துச் சென்றவர்கள் அவளை ஒரு மரத்தடியில் தள்ளிவிட்டு அவளது காலையும் கட்டிவிடவும் சமுத்திராவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போனது.அவளிடம் முதலில் அடிவாங்கியவன் இன்னொருவனிடம்...
"டேய் யாராவது வராங்களானு வாட்ச் பன்னு கொஞ்ச நேரம். அப்றம் உன் டெர்ன் "...என்றவன் சமுத்திராவிடம் நெருங்க அவளோ பின்னோக்கி நகரந்தாள்.அவள் நகர்ந்ததில் கையில் கட்டியிருந்த ஷால் அந்த மரத்தின் வேரில் மாட்டிக் கொள்ள அவளால் மேலும் நகரமுடியவில்லை.கண்ணில் நீர் வழிய கிடந்தவளின் அருகில் வந்தவன் அவள் கன்னங்களில் மாற்றி மாற்றி அறைந்தான்.அவன் அறைந்ததில் அவள் இதழ் ஓரம் கிழிந்து இரத்தம் வழிந்தது.
"எவ்ளோ திமிருடி உனக்கு. ஆம்பள நான் என்னையே எட்டி உதைக்கிற. உன்னையெல்லாம் இன்னும் நாலு போட்டாக் கூட தப்பில்ல.ஆனா அடியெல்லாம் அப்றம் தான் இப்போ "....என்றவன் அவனது ஒற்றை விரலை அவள் நெற்றியிலிருந்து கீழே படரவிட்டான்.அருவருப்பில் நெழிந்தவள் பின்னோக்கி வேகமாக நகர கையில் கட்டப்பட்டிருந்த கட்டு அவிழ்ந்துக் கொண்டது.அவன் அறியாவண்ணம் இரண்டு கைகளிலிலும் கொத்தாக மண்ணை அள்ளியவள் அவன் கண்ணில் எறிந்துவிட்டாள்.
"ஆஆஆஆ" என்றபடி கண்ணைத் தேய்த்துக் கொண்டு அவன் நகரவும் வேகமாக வேகமாக கால் கட்டை அவிழ்த்தவள் சுற்றுமுற்றும் தேடினாள்.அடிப்பதற்கு ஏற்றவாரு கட்டை ஒன்று கிடக்க அதை எடுத்துக் கொண்டவள் தன்னால் முடிந்தவரை அவனை அடித்துவிட்டாள்.அவன் "அய்யோ அம்மா ".,..என்று கதற இன்னொருவன் சத்தம் கேட்டு வந்துவிட்டான்.சுதாரித்துக் கொண்டவள் அவன் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டாள்.அவனும் அவளிடம் சரமாரியாக அடி வாங்க அவனது பாக்கெட்டிலிருந்து அவளது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டவள் அங்கிருந்து நகர இரண்டடிக் கூட எடுத்து வைக்கவில்லை.மீண்டும் அவர்கள் அருகில் சென்றவள் இருவரும் வலியால் துடிப்பதைப் பார்த்துவிட்டு கண்குளிர ரசித்தாள்.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ