ராம கிருஷ்ணனின் சித்தி மகளின் மகளிற்கு திருமணம் என அழைப்பிதழ் வைத்திருந்தனர்.சாரதாவிற்கு அந்த குடும்பம் என்றால் ஆகாது.திருமணத்திற்கு வர மறுத்தவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார் அவர் கணவர்.சக்தியை அழைத்ததற்கு அவனும் வர முடியாது என்றுவிட்டான்.
நாளை மறுநாள் காலை ஆறுமணியளவில் முகூர்த்தம்.இன்று மாலை அங்கு கிளம்புவதாகத் திட்டமிருந்தனர்.சாரதாவிற்கு கவலை சமுத்திராவையும் சக்தியையும் தனியாக விட்டுச் செல்வதில் தான்.அவர்களை தனியாக விட்டுச் செல்வதும் எலியையும் பூனையயும் ஒரே அறையில் வைப்பதும் ஒன்று தான்.இதை காரணமாகச் சொல்லியும் ராம கிருஷ்ணன் கேட்கவே இல்லை.மாலை சக்தி வருவதற்காக இருவரும் காத்திருந்தனர்.
"அம்மா என்ன நீயும் கிளம்பி நிக்கிற."...என்க
"உன் அப்பா தான்டா என்னையும் கூப்பிட்றாரு.நான் என்ன பன்ன "..,.என்றார்.
அவன் தந்தையின் புறம் திரும்பியவன்.,..
"என்னப்பா இதெல்லாம் அம்மா இருக்கட்டுமே .நீங்க மட்டும் போங்க ",...என்றதும் .,
"சின்னப் புள்ள மாதிரி அடம் புடிக்காத சக்தி.உன் அம்மாவும் வந்தா தான் மரியாதையா இருக்கும். ",.,.என்க
"சரி தான்பா ஆனா என்னால அந்த பிசாசுக் கூடலாம் இருக்க முடியாது. "...என்றான்.
"டேய் வாயிலயே போட்டேனா. எதுக்குடா அவள பிசாசுங்ற ".,.என முந்திக் கொண்ட சாரதாவை முறைத்தவன் .,..
"பல்டி அடிக்கிறியாமா "...என்றான்.
"நான் பல்டிலாம் அடிக்கல. நீ கொஞ்சம் அவக்கூட சண்டை போடாம இரு "...என்றவர் கிளம்ப எத்தனிக்க,..
"அப்போ எனக்கு சாப்பாடுலாம் ",,என்றவனிடம்...
"சமு சமச்சி தருவாடா "..,என்றதும் விழி பிதுங்கியவன் ..,
"அம்மா ",..என்றான்.
"இப்ப என்னடா ",.,.
"அவ சமச்சி சாப்டா நான் செத்துருவேன் ".,.என்க...
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ