உதயா சக்தி தங்களை நோக்கி வருவதை கவனித்துவிட்டான்.அவன் சமுத்திராவிடம் ஏதேனும் கோவமாக பேசிவிடுவானோ என்ற பயம்.அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் உதயாவையே கூர்ந்து பார்க்கவும் உதயாவால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. சமுத்திரா சக்தி வந்து நின்றதை விரும்பாதவளாய் ...
"நான் கிளம்புறேன் உதய் பாய் "...என்றவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காது விருவிருவெனச் சென்றுவிட்டாள்.
சக்தியின் பார்வை அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவன்...
"சக்தி அது வந்து. சமுத்திரா தான் ட்ரீட் தரதா சொல்லி கூப்டாங்க.அதான் மறுக்க முடியல "...என விழி நோக்காமல் தயங்கியவனிடம்....
"நீ அவள விரும்புறியா? "...என்று கேட்டுவிட்டான் சக்தி.
எது அவனுக்கு தெரியக் கூடாது என்று நினைத்தானோ அதை அவன் நண்பன் கணித்துவிட்டான்.திடுக்கிட்டு சக்தியை நிமிர்ந்துப் பார்த்தவன்...
"சக்தி ஏன் திடீர்னு இப்படியெல்லாம் கேக்கற "...என்றான்.
"நான் சொல்லியும் அதையே நீ திரும்ப பன்றல. அதான் இப்படி கேக்றேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு "...என்றான்.
"அப்படி எதுவும் இல்ல சக்தி. நான் சும்மா ப்ரண்ட்லியா தான் பழகுறேன் ".,என பொய்யுறைத்துவிட்டான்.
அவனை இன்னும் ஆழமாய்ப் பார்த்தவன் "ஸ்யூர்? ",..என்க...
"உண்மை தான்டா "...என்றான். உதயாவிற்கு குற்றுணர்ச்சியாக இருந்தது.இன்னும் சில காலம் தான் அதற்குள் சமுத்திராவிடம் தன் காதலைச் சொல்லி அவளிடம் சம்மதம் பெற்றப்பின் சக்தியிடம் பொறுமையாக எடுத்துக் கூறிவிடலாம் என்றிருந்தான்.
சக்தி "நம்பறேன் ".,.என்றவுடன் தான் உதயாவிற்கு நிம்மதியாய் இருந்தது.
"நீ ஏன்டா இவ்ளோ லேட்டா வீட்டுக்கு போற "...என்றவனிடம் இரண்டு நாட்களாக நடந்தவற்றை உதயாவிடம் கூறினான்.
"மேஹாவுக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு வெளியே கூட்டிட்டு போனான்டா "....என்றான்..
.
.
.
.
.
.
இளங்கொடி சமுத்திராவை பார்த்துச் செல்வதற்காக வந்திருந்தார்.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ