2

17.2K 302 56
                                    

நடேசன் மற்றும் இளங்கொடி தம்பதியினருக்கு பிறந்தவள்  சமுத்திரா.

ராமகிருஷ்ணன்
சாரதா தம்பதியினருக்கு பிறந்தவன் தான் சக்தி என்கிற சக்திதரன்.

தன் தாய் தந்தையரை இழந்த சூழலிலும் நடேசன் சாராதாவை தன்னால் முடிந்தவரை படிக்க வைத்து நல்ல வாழ்க்கையும் அமைத்துத் தந்தார்.

சாரதாவிற்கு அண்ணன் என்றால் உயிர்.நடேசனை இதுவரை தன் கணவனிடம் கூட விட்டுக் கொடுத்ததில்லை.

சாரதாவிற்கு திருமணமான மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் நடேசன் இளங்கொடியை மணந்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள சில்லூர் தான் நடேசனின் சொந்த ஊர்.அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள உடையார்பாளையம் ராமகிருஷ்ணன் சொந்த ஊர்.

சமுத்திரா இளங்கொடியிடம் இருந்ததை விட அவள் அத்தை வீட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம்.சக்தியும் சமுத்திராவும் ஒரே பள்ளிக்குச் சென்றாலும் ஒருவரை ஒருவர் முறைத்த வண்ணம் தான் இருப்பர். காரணம் சக்தியின் வீட்டில் சமுத்திராவிற்கு முக்கியத்துவம் அதிகம். சமுத்திராவின் வீட்டில் சக்திக்கு தான் முக்கியத்துவம் அதிகம் .
சாரதாவிற்கு பெண் பிள்ளை என்றால் இஷ்டம்.அவள் அண்ணணிற்கு ஆண்பிள்ளை என்றால் இஷ்டம். இவ்வாறாக இரு தம்பதியினர் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக பிறந்தவர்கள் தான் சக்தியும் சமுத்திராவும்.

இருவருக்கும் அவர்களின் அத்தை மாமாவிடம் கிடைக்கும் செல்லம் சிறுவயதில் பொறாமை உணர்வைத் தூண்டிவிட அது நாளடைவில் வெறுப்பாக மாறிப்போனது.பெரியவர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால்
எதிர்காலத்தில் வரப்போகும் விளைவையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பதிமூன்று வருடங்களிற்கு முன்பு நடேசன் பணி இடமாற்றம் (டிரான்ஸ்பர் ) காரணமாக குடும்பத்துடன் சென்னை கிளம்பும் சூழல் ஏற்பட்டுவிட அது சமுத்திராவை பாதித்தது.
சக்திக்கும் வருத்தம் என்றாலும் சாரதாவிடம் செல்லம் கொஞ்சி விளையாட சமுத்திரா இனி வரமாட்டாள்
என்பதே பெரும் நிம்மதியை தந்தது.சமுத்திரா அழுகையுடன் கிளம்பும் போது பழித்துக் காண்பித்து சக்தி இன்பம் பெற்றுக் கொண்டான்.அன்று தான் அவளை கடைசியாக பார்த்தது.

இரவா பகலாWhere stories live. Discover now