34

6K 265 56
                                    

அன்று மழை கொஞ்சம் அதிகம் பொழிய சக்தி ஜர்கின் அணிந்திருந்தமையால் லேசாக மட்டும் நனைந்திருந்தான். அறைக்குள் நுழைந்தவன் மொபைலை ஜார்ஜில் போட்டுவிட்டு ஜர்கினை கலட்ட முற்பட அவனது மொபைல் ரிங்கானது. திரையில் உதயா என்றிருக்க துணுக்குற்றவன் அழைப்பை ஏற்தான்.

"சொல்லுடா இந்நேரத்துல கால் பன்னிருக்க. எதாச்சும் ப்ராப்ளமா.. "....என்க
எதிர்முனையில்

"ஆமாடா அக்காக்கு லேபர் பெயின்டா. ஆனா டெலிவரி டேட்க்கு இன்னும் டூ மன்த்ஸ் இருக்கு. அம்மா என்னென்னமோ சொல்றாங்க. எனக்கு பயமா இருக்கு ., "....என்றவனின் குரல் நடுக்கமுற.....

"ரிலேக்ஸ்டா பயப்படாத. நான் வரேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். "....என்றான்.

"அடிக்கிற காத்து மழைல அக்காவ வெளிய கூட்டிட்டு போகவே பயமா இருக்குடா. இப்போதான் காத்துக்கு பக்கத்துல இருந்த மரம் விழுந்துச்சி. ".....என்றான்.

"ஆமா காத்தும் இப்போ அதிகாதான்வ அடிக்குது. ப்ச் இப்ப என்ன பன்னலாம். "....என்ற சிந்தனைக்கு சென்றவனிடம்.....

"நீ மித்ராவ கூட்டிட்டு சீக்ரம் வாடா. இப்போதைக்கு அவங்க மேனேஜ் பன்னுவாங்க இல்ல. அப்றம் மழை குறைஞ்சதும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம். கொஞ்சம் சீக்கிரம் வாடா., "....என அவன் துரிதப்படுத்த......

"ஓகேடா நான் அவள கூட்டிட்டு வரேன் ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ். நீ அக்கா கூட இரு. "......என்க....

"ம்ம்ம் ஆனா நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பார்த்து வாங்க. ".....என்றபடி
அழைப்பை துண்டித்தவன் எண்ணெமெல்லாம் தன் சகோதரியை சுற்றியே இருந்தது.
சக்திக்கும் உடன் பிறந்தவள் இல்லாத குறையை தீர்த்து வைத்தது உமா தான். உதயாவிற்கு ஈடாகவே சக்தியை கருதுவாள். சக்திக்கும் லேசாக பதற்றம் தொற்றிக் கொள்ள அதே பதட்டத்துடன் சமுத்திராவின் அறைக்குள் நுழைந்துவிட்டான். போர்வைக்குள் சுருண்டு கிடந்தவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

இரண்டு மூன்று முறை அவள் பெயர் சொல்லி அழைத்தவன் அவள் எழாமல் இருக்கவும்....... "இவ வேற "...என்றபடி போர்வையை இழுத்து கீழே தள்ள பதறியடித்து எழுந்தவழுக்கு என்ன நிகழ்ந்தது என புரிவதற்குள் அவளது கையை பிடித்து கீழே இழுத்து வரவும் தூக்கத்திலிருந்து தெளிந்தவள் வெடுக்கென்று கையை உறுவிக் கொண்டாள்.

இரவா பகலாWhere stories live. Discover now