"வீட்டுக்கு வந்துட்டுப் போ மீரா ".,..
"ஓய் நான் மதுரை போய் சேர வேண்டாவா. வீட்டுக்கு வந்துட்டுப் போனா லேட்டாயிடாதா "...
"இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு கூட வராம போனா எப்படி வா மீரா " ,..என சமுத்திரா வற்புறுத்தவும் அவளுடன் கிளம்பினாள்.
இரண்டு மூன்று கடைகளில் ஏறி தனக்கு ஆடை வாங்கியவள் தனக்கு மேக்கப் செட் வாங்க சக்தியை ஒரு கடையினுள் அழைத்துச் சென்றாள்.
"ப்ச் இன்னும் முடியலையா மேஹா ",,என அழுத்துக் கொண்டவனிடம்....
"இங்க முடிஞ்சதுனா அப்றம் ஃபன்லேன்ட் அப்றம் லன்ச் அப்றம் வீட்டுக்கு ஓகேவா "...என்றவள் அவனை உள்ளே அழைத்து சென்றாள்.தலையில் அடித்துக் கொண்டவன் அவள் பின்னோடு சென்றான்.
மூன்று மணியளவில் உணவருந்த ஒரு உணவகத்திற்கு சென்றவர்கள் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.
"எனக்கு ஒரு டவுட் மேஹா இன்னக்கி காட்ஸ் உன் பின்னாடி வரது பிடிக்காம பர்தா போட்டுட்டு வந்த. நாளையிலருந்து என்னப் பன்ன போற "...என்றபடி புருவம் உயர்த்தி கேட்க...
"ஹாங் அதுக்குனு டெய்லி பர்தா போட்டுட்டு வரமுடியுமா.இன்னக்கி சன்டே நானும் ப்ரீயா சுத்தனும், அந்த தடியன்களுக்கும் லீவ் தரனும்னு நினைச்சேன் "...
"பார்ரா ரொம்ப தாராள மனசு தான் "...
"ம்ம்ம் ஆமா ஆமா "...
"அப்போ நாளைலருந்து காட்ஸ் உன்ன பாலோ பன்றது உனக்கு ஓகேவா "...என்றதும்...
"ஓகேனுலா சொல்லமுடியாது.அத என் அப்பாக்கிட்ட பேசி டீல் பன்னிக்க வேண்டியதுதான் "...என்றபடி தோள் குலுக்கியவளிடம்...
"உன் சேப்டிக்காக தான மேஹா "...என்றவனை இடைமறித்தவள்...
"ப்ச் அத விடு தரன். இங்க பிரியாணி நல்லா இருக்கும் தெரியுமா ".,.என்க ,,,
"தெரியுமே உனக்கு எந்தெந்த ஹோட்டல்ல என்னன்ன சாப்பாடு நல்லா இருக்கும்னு தெரியும்ன்றது எனக்கு தெரியும் "...என்றான்.,.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ