கதவை திறக்க இருந்தவன் சமுத்திராவின் செருமல் சப்தம் கேட்டு திரும்பினான்.
அவள்.....
"தேங்க்ஸ் ".....என்றவுடன் எதற்கு என்பதைப் போல் அவன் புருவம் உயர்த்த....
"அவங்க என்கிட்ட வந்து சாரி கேட்டாங்க.அதான் "........என்றிழுக்க ....
"அதுக்கெதுக்கு எனக்கு தேங்க்ஸ் "....என்க ....
"இல்ல நீங்க தான் அவனுங்கள அடிச்சி சாரி சொல்லவச்சிங்கனு எனக்கு தெரியும்"....என்றாள்.
"அப்படிலாம் எதுவும் இல்ல. எனக்கு வேற வேல இல்ல பாரு .."....என்றதும் இதழ் லேசாக வளைய அவனையே உறுத்துப் பார்த்தாள்.
அதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன் .....
"சரி அதான் தேங்க்ஸ் சொல்லிட்டல்ல. நான் போறேன். எனக்கு தூக்கம் வருது"....என்றவன் கிளம்ப எத்தனிக்க....
"ஒரு நிமிஷம் "...என்றவள் "சாரி "...என்றாள்.
இது எதற்கு என்பது போல் அவன் மீண்டும் புருவம் உயர்த்த....
"அத்த அப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் தான் காரணம். அதான் "....என்றாள்.
"ஹோ"....என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய்....
"ஏய் இதெல்லாம் உனக்கு பன்றதுனால உன் மேல உள்ள கோவமும் வெறுப்பும் எப்பவுமே குறையாது.எப்பவுமே நீ என்னோட எதிரிதான் புரியுதா ".....என்றவன் அவள் பதிலை எதிர்ப்பார்க்காது அவனறையினுள் நுழைந்துக் கொண்டான்.
அவன் சென்றப் பின்னரே அவன் சொன்னது உரைக்க தலையிலடித்துக் கொண்டவள்.....
"இவன்கிட்ட போய் சாரி கேட்டேன் பாரு என்ன சொல்லனும். திருந்தாத ஜென்மம். "....என்றவள் தானும் அறையில் அடைந்துக் கொண்டாள்.
.
.
.
.
.
வேலை விஷயமாக பெங்களூர் சென்றிருந்தவன் இன்று காலை தான் வீடு வந்து சேர்ந்திருந்தான்.இந்த மூன்று நாட்களில் சமுத்திராவை தொடர்புக் கொள்ள முடியாதிருந்தவன் வீடு வந்து சேர்ந்த அடுத்த நொடி அவளை போனில் அழைக்க அவளோ எடுத்தாபாடில்லை.
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ