தன் நெற்றியில் திருநீரை வைத்துவிட்ட அன்னையிடம்.,.
"ஏன்மா கோவிலுக்கு அக்காவையும் கூப்பிட்டிருக்கலாம்ல "...என்ற உதயாவை முறைத்தவர்.,.
" வாயும் வயிறுமா இருக்கவல அங்கயும் இங்கயும் அலைய வைக்க கூடாதுடா"...என்றார்.
பூஜை முடிந்தவுடன் சன்னதியில் அமரலாம் என உதயாவின் கரம் பற்றி அழைத்துச் சென்றவரின் கவனம் ஒரு பெண்ணின் மீது பதிந்தது.
அவள் எக்கி எக்கி கோவில் மணியை அடித்துக் கொண்டிருந்தாள்.
"அழகா லட்சணமா இருக்கா ".,..என்றதும் தானும் விழியை திருப்பினான்.
அங்கு சமுத்திரா பட்டுப் புடவையில் அழகு சிலையாய் கோவில் மணி அடித்துக் கொண்டிருந்தாள்.
உதயா சமுத்திராவைப் பார்த்த இரண்டு முறையுமே அவள் சுடிதார் தான் அணிந்திருந்தாள்.அவளை புடவையில் பார்க்கவும் மெய்மறந்துப் போனான்.சற்று நேரத்தில் சாரதா வந்து சமுத்திராவை அழைத்துச் செல்வதை கவனித்தவர்....
"டேய் அது சக்தியோட அம்மா சாரதா தான? "...
உதயா எதுவும் காதில் விழாதது போல் நிற்கவும்,.,.
"டேய் உன்னதான்டா ".,.என அவனை உலுக்கியவர்..,.
"சக்தி அம்மா அந்த பொண்ண கூட்டிட்டு போறாங்க.யாருடா அவ.அவங்க சொந்தமா? .,.என்றார்.
தன் அன்னை உலுக்கவும் தன்னிலை உணர்ந்தவன்...
"ஹாங்.,.ஆ ,..ஆமாம்மா அவங்க சொந்தம் தான்.அவங்க அண்ணன் பொண்ணு " .,..என்றதும் .,."ஹோ அப்படியா.,. பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா "....
என்றவர் அவர்கள் அருகில் செல்ல உதயாவும் உடன் சென்றான்.சமுத்திரா தீவிரமாக தன் மாமாவிடம் பேசிக் கொண்டிருக்க சாரதாவின் அருகில் சென்ற பாக்கியவதி
அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க உதயாவின் கண்களோ சமுத்திராவின் மீதே நிலைத்திருந்தது.அவன் தோள் தொட்ட சக்தி...
"என்னடா மந்திரிச்சி விட்ட மாதிரி நிக்கிற "...
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ