11

6.1K 258 28
                                    

சக்தி சொன்னபடியே மேஹாவிற்கு சமையல் ஆள் தேடிக் கொடுத்தான்.

ஜெயந்தி கணவரால் கைவிடப்பட்டவர்.இரண்டு பெண் பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்து தான் தன் குழந்தைகளை படிக்க வைக்கிறார்.சாரதா இரண்டு முறை ஜெயந்திக்கு உதவியிருக்கிறார்.தற்போது ஜெயந்தி பணிபுரியும் வீட்டில் அனைவரும் கனடாவிற்கு சென்று செட்டிலாகி விட வேலைக்காக சாரதாவின் உதவியை நாடியிருந்தார்.இந்த சமயத்தில் தான் சக்தி சமையல் ஆள் தேவை என்ற விஷயத்தைக் கூற சாரதாவும்
ஜெயந்தியை சக்திக்கு அறிமுகம் செய்து மேஹாவின் வீட்டில் சமையல் செய்யுமாறு அனுப்பி வைத்தார்.

மேஹாவிற்கும் ஜெயந்தியைப் பிடித்துப் போனது. அவளிடம் தன் குடும்ப கஷ்டத்தைக் கூற அவளே குழந்தைகளின் பள்ளி செலவையும் ஏற்றுக் கொண்டாள்.சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது என அனைத்து வேலையையும் ஜெயந்தி இழுத்துப் போட்டு செய்ய மேஹா அவருக்கு மாதம் பதினைந்தாயிரம் தருவதாக கூறினாள்.

நாட்கள் மெல்ல நகர மகிழூரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது.சக்தியும் மேஹாவும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க ராகவேந்திரன் கூறியதுபோல் பல கம்பெனிகளிலிருந்து மிரட்டல்கள் வந்தது.அதையெல்லாம் எதிர்கொண்டு சக்தியும் மேஹாவும் பணியில் மும்பரமாய் இறங்கியிருந்தனர்.காரணம் ராகவேந்திரன் அவர்களின் மீது வைத்த நம்பிக்கை.
.
.
.
இதற்கிடையில் ராகவேந்திரன் அடிக்கடி இருவரையும் சந்தித்து பாராட்டியும் ஊக்குவித்தும் வந்தார்.

.
.
.
.
,
அன்று சனிக்கிழமை .பெருமாள் கோவிலில் விஷேஷ பூஜை என்பதால் சாரதா சக்தியையும் சமுத்திராவையும் மதியமே வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டார்.

சமுத்திரா மதியம் ஒரு மணியளவில் வந்திருக்க சக்தி வேலை மிகுதி என்பதால் மூன்று மணிக்கு தான் வீடுவந்து சேர்த்தான்.அதற்கான திட்டையும் சாரதாவிடமிருந்துப் பெற்றுக் கொண்டான். சக்தி கோவிலுக்கு மேஹாவையும் அழைக்க அவளோ உடல் அசதியாக இருப்பதாகவும் ஓய்வு எடுக்கப் போவதாகவும் கூறிவிட சக்தி மேலும் அவளை வற்புறுத்தாமல் வந்துவிட்டான்.

இரவா பகலாWhere stories live. Discover now