குளித்து முடித்துவிட்டு கீழே வந்தவன் சாரதாவை தேட கையில் கரன்டியுடன் கிட்சனிலிருந்து வெளியே வந்தவர் .........
"நீ திருந்தவே மாட்டியா. ஏன்டா இப்படி இருக்க. எங்கருந்துடா உனக்கு இந்த பழக்கமெல்லாம் வந்துச்சி "......என்க.......
காபிக்காக கீழிறங்கி வந்தவன் தன் அன்னை எதை குறிப்பிடுகிறார் என்பது புரியாமல் திருத்திருவென முழித்தான்.சக்தி தெளிவதற்குள் சாரதாவின் கையிலிருந்த கரன்டி அவன் நெற்றியை பதம் பார்த்தது.
"ஸ்ஆஆஆஆ..... ",.....அடிப்பட்ட இடத்தை தேய்த்துக் கொண்டே.....
"இப்ப என்ன ஆச்சுனு கரன்டியால அடிக்குற. இந்த பழக்கமெல்லாம் உனக்கு எங்க இருந்து வந்துச்சி. "......எதிர் கேள்வி கேட்க......
தன் கணவர் வருகிறாரா என சுற்றும் முற்றும் பார்த்தவர்......... சக்தியின் காதை பிடித்திழுத்தபடி கிட்சனிற்குள் அழைத்து சென்றார்.
"எரும எரும எப்போலருந்துடா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்ச. இது உன் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது. "......என்றவருக்கு தன் கணவரை குறித்த பயம் இருந்தது.
அனைத்தும் விளங்க என்ன சொல்வது என புரியாமல் நின்றிருந்தவன்...... சமாளிக்கும் விதமாக.......
"சரி விடுமா இதெல்லாம் ஒரு மேட்டரா. சும்மா காபிய போடுவியா. "......என்க.... கோவம் உச்சந்தலைக்கேற......
"நீ சிகரெட் பிடிக்கிறதா சமு சொன்னபோ கூட நான் கோவப்படலடா ஆனா எனக்கு இந்த விஷயம் தெரிஞசதுக்கு அப்றமும் நீ இப்படி பேசுற பாரு. உன்ன என்னடா பன்னலாம். ""......என்க.....
"ஓ அந்த இராட்சசி தான் உன்கிட்ட போட்டுக் குடுத்ததா. அவளுக்கு இருக்கு இன்னக்கி. ".....என்றவன் தன் கைகளை முறுக்க.......
"வாய மூடுடா. அப்படியே ரெண்டு போட்டேனா பாரு. நீ தப்பு பன்னிட்டு அவள எதுக்குடா இராட்சசிங்குற. எங்க அண்ணே அவர் பொண்ண நல்லா வளத்துருக்காரு. எங்க வளர்ப்புதான் சரியில்ல. "என்றபடி....... ஹாலிற்கு வந்தவர் தன் கணவர் எதுவும் வந்துவிட்டாரா என்பதை கவனித்துவிட்டு மீண்டும் கிட்சனுள் நுழைந்து......
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ