5

8K 277 26
                                    

சக்தி காலையில் எழுந்தவுடன் வாயிலில் நின்றபடி  சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கார் அவன் வீட்டின் முன் நிற்க அதையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை
இடித்தபடி வெளியே வந்த சாரதா.,..

வாங்க அண்ணா ஆறு மணிக்கே  வந்து சேர்ந்துருவிங்கனு சொன்னிங்க மணி எட்டறை ஆகுது. என்னாச்சுனா,..

வண்டி பிரேக் டௌன் ஆகிருச்சுமா. அதான் லேட்,.. என்றவரின் லக்கேஜை வாங்கிக் கொண்டவர் சக்தியின் புறம் திரும்பி.,..

கார் டிக்கில பேக் நிறைய இருக்கு எடுத்து கொண்டுவந்து மேல ரூம்ல வைடா ....என்றவர் அவன் முக பாவனையை கவனிக்காமல் உள்ளே சென்று விட.,..

என்னப்பா சக்தி அமைதியா இருக்க .எங்கள கண்டுக்கவும் மாட்ற...என்ற நடேசனிடம்.

ஹான் மாமா.,.அதெல்லாம் ஒன்னுல்ல.,எப்படி இருக்கிங்க...

நல்லாருக்கேன் .நீ எப்படி இருக்க .,

ம்ம்ம் பைன் மாமா ..என்றவனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு.. நடேசன் உள்ளே சென்றுவிட்டார்.

அவரை தொடர்ந்து வந்த தன் அத்தையிடமும் நலம் விசாரித்தவன்,,..

புருவம் சுருக்கியபடி திரும்ப...
சமுத்திரா அப்போது தான் காரை விட்டு இறங்கினாள்.

இருவரின் பார்வையும் ஒரே நேர்க் கோட்டில் சந்தித்துக் கொண்டது.

சக்தியை அலட்சியமாக பார்த்தவள் அவனை கடந்துச் செல்லுமுன் ஏளனமாக இதழை வளைத்துவிட்டு சென்றாள்.

அவளின் இதழ் வளைப்பு பதிமூன்று வருடத்திற்கு முன் சமுத்திரா அந்த ஊரை விட்டு கிளம்பும் போது  பழித்துக் காண்பித்து அவளை அழ வைத்தது நினைவு வந்தது.

இன்று அவனிடத்தில் அவளும் அவளிடத்தில் அவனும் இருப்பதைப் போல் பிரம்மை தோன்ற.

இவ என்ன இப்படி சிரிச்சிட்டுப் போறா இதுல ஏதோ உள் குத்து இருக்கும் போல..என்றவன் தன் அன்னையை தேடிச் சென்றான்.

இரவா பகலாWhere stories live. Discover now