"இப்படி தான் ஒரு பொண்ண அடிக்கப்போவியா. உனக்கு அறிவே இல்லையாடா ",...என்றவன் சக்தியை முறைக்க ...
"முதல்ல அவ என்ன பன்னானு கேளு. அப்றம் என்ன திட்டு " ..,
"அவங்க என்னவோ பன்னிட்டுப் போட்டும் .அதுக்கு இப்படி தான் கை ஓங்குவியா? "...என்றவனை இம்முறை சக்தி முறைத்தான்.
"எனக்கு ஒன்னு மட்டும் புரியல .நீ எனக்கு பிரண்டா இல்ல அவளுக்கு பிரண்டா "...
"ஏன்டா இப்படி கேக்ற.நான் முதல்ல உனக்கு தான்டா பிரண்டு ",..என்றான்.
"அப்போ நான் சொல்றதையும் காது கொடுத்து கேட்டுட்டு அப்றம் யாருக்கு சப்போர்ட் பன்னலாம்னு முடிவு பன்னிக்கோ "...என்றவன் முகத்தை திருப்பிக் கொள்ள.,
அவன் முன் சென்று நின்றவன்..."சரி சொல்லு என்னதான்டா நடந்துச்சி"...எனவும் அவனிடம் நடந்ததை கூறினான்.
"புரிஞ்சிக்கோ சக்தி அவங்க உன்ன மாட்டி விடனும்னு நினைச்சிருந்தா உன்ன சிகரெட்டோட பார்த்தன்னக்கே அம்மாக்கிட்டையோ அப்பாக்கிட்டையோ சொல்லிருப்பாங்க ",...என்றவனை இடைமறித்தவன் .,.
"அப்போ நான் பொய் சொல்றேனு சொல்றியா? "... என்றதும் அவனை தவிப்போடு பார்த்தவன்.,.
"நான் அப்படி மீன் பன்னல "...
"அது என்னடா புதுசா வந்த அவளுக்கே எல்லாரும் சப்போர்ட் பன்றிங்க. என்ன மறந்தறிங்க.என் வீட்ல கூட அவள தலைல தூக்கி வச்சி கொண்டாடி என் கழுத்த அறுக்குறாங்க.இப்போ நீயும் அதையே பன்ற "...
"ஏன் சக்தி இப்படி பேசுற. நீ என்னோட பிரண்டுடா.நான் அப்படி உன்ன நினைப்பேனா ".,.
"அப்படினா ஏன்டா எனக்கு பிடிக்காதத நீயும் பன்ற "....
"நான் என்னத்தடா பன்னேன் "...
"நீ அவளுக்கு ஹெல்ப் பன்றது. அவக்கிட்ட பேசுறது எதுவுமே எனக்கு புடிக்கல "....
"ப்ளட் டொனேட் பன்னது ஒரு குத்தமாடா ",..
"அது தப்பு இல்ல. அத அவ கேட்டதுனாலதான பன்ன அத சொன்னேன் "..,
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ